செட்டா நகர் ஜங்‌ஷனில் ரூ.249¼ கோடி செலவில் புதிதாக 3 மேம்பாலங்கள் எம்.எம்.ஆர்.டி.ஏ. கட்டுகிறது


செட்டா நகர் ஜங்‌ஷனில் ரூ.249¼ கோடி செலவில் புதிதாக 3 மேம்பாலங்கள் எம்.எம்.ஆர்.டி.ஏ. கட்டுகிறது
x
தினத்தந்தி 8 Nov 2017 3:38 AM IST (Updated: 8 Nov 2017 3:38 AM IST)
t-max-icont-min-icon

செட்டா நகர் ஜங்‌ஷனில் ரூ.249¼ கோடி செலவில் புதிதாக 3 மேம்பாலங்களை எம்.எம்.ஆர்.டி.ஏ. கட்டுகிறது.

மும்பை,

செட்டா நகர் ஜங்‌ஷனில் ரூ.249¼ கோடி செலவில் புதிதாக 3 மேம்பாலங்களை எம்.எம்.ஆர்.டி.ஏ. கட்டுகிறது.

புதிய மேம்பாலங்கள்

மும்பை செட்டா நகர் ஜங்‌ஷன் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகும். இங்கு ரூ.249 கோடியே 29 லட்சம் செலவில் புதிதாக 3 மேம்பாலங்களை கட்ட மும்பை பெருநகர வளர்ச்சிக்குழுமம் (எம்.எம்.ஆர்.டி.ஏ.) முடிவு செய்து உள்ளது.

இதன்படி அங்குள்ள கிழக்கு விரைவு சாலையில் தானே– சயான் மார்க்கத்தில் 680 மீட்டர் நீளத்திலும், நவிமும்பையில் இருந்து தானேக்கு செல்பவர்கள் சிரமமின்றி செல்லும் வகையில் மான்கூர்டு– தானே மார்க்கத்தில் 1,235 மீட்டர் நீளத்திலும் மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளன.

ஜனவரியில்...

இதேபோல செட்டா நகர் ஜங்‌ஷனில் இருந்து நேரடியாக சாந்தாகுருஸ்– செம்பூர் இணைப்பு சாலையை இணைக்கும் வகையில் 638 மீட்டர் நீளத்திலும் புதிய மேம்பாலங்கள் அமைகிறது.

இதுபற்றி எம்.எம்.ஆர்.டி.ஏ. அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘செட்டாநகர் ஜங்‌ஷன் பகுதியில் அமையும் 3 புதிய மேம்பால பணிக்கான டெண்டர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரும் ஜனவரி மாதம் இதற்கான பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.


Next Story