கல்லூரியில் ‘சீட்’ வாங்கி தருவதாக நகைக்கடைக்காரர் மகனிடம் ரூ.4½ லட்சம் மோசடி
கல்லூரியில் ‘சீட்’ வாங்கி தருவதாக நகைக்கடைக்காரர் மகனிடம் ரூ.4½ லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
மும்பை,
கல்லூரியில் ‘சீட்’ வாங்கி தருவதாக நகைக்கடைக்காரர் மகனிடம் ரூ.4½ லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
கல்லூரியில் சீட்...மும்பை ஜோகேஸ்வரி கிழக்கு பகுதியை சேர்ந்தவர் அஜிஸ். நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் அபிஷேக். பாந்திராவில் உள்ள ஒரு கட்டிடவியல் கல்லூரியில் சேர விரும்பினார். இந்த நிலையில், அவருக்கு அறிமுகமான 2 பேர் தாங்கள் அந்த கல்லூரியில் ‘சீட்’ வாங்கி தருவதாக அவரிடம் ஆசை வார்த்தை கூறினர்.
இதற்காக அவர்கள் அபிஷேக்கிடம் இருந்து ரூ.4 லட்சத்து 63 ஆயிரம் வரை பணம் வாங்கி உள்ளனர். பின்னர் அவர்கள் அபிஷேக்கிடம் கல்லூரியில் ‘சீட்’ கிடைத்து விட்டதாக கூறி, ஒரு ரசீதை கொடுத்து சென்றனர்.
2 பேருக்கு வலைவீச்சுஅந்த ரசீதை எடுத்துக்கொண்டு அபிஷேக் கல்லூரியில் விசாரித்தபோது, அது போலியானது என்பது தெரியவந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அபிஷேக் சம்பவம் குறித்து மேக்வாடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரிடம் பணமோசடி செய்த ஆசாமிகள் 2 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.