காட்கோபர் கட்டிட விபத்தில் கைதான சிவசேனா பிரமுகரின் ஜாமீன் மனு தள்ளுபடி


காட்கோபர் கட்டிட விபத்தில் கைதான சிவசேனா பிரமுகரின் ஜாமீன் மனு தள்ளுபடி
x
தினத்தந்தி 8 Nov 2017 3:50 AM IST (Updated: 8 Nov 2017 3:50 AM IST)
t-max-icont-min-icon

காட்கோபர் கட்டிட விபத்தில் கைதான சிவசேனா பிரமுகரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

மும்பை,

காட்கோபர் கட்டிட விபத்தில் கைதான சிவசேனா பிரமுகரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

கட்டிட விபத்து

மும்பை காட்கோபர் மேற்கில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி மார்க் தாமோதர் பார்க் பகுதியில் இருந்த சாய் தர்‌ஷன் என்ற 4 மாடி கட்டிடம் கடந்த ஜூலை மாதம் 25–ந்தேதி திடீரென இடிந்து விழுந்தது. இந்த கோர விபத்தில் கட்டிடத்தில் உள்ள வீடுகளில் வசித்து வந்த 17 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

அந்த கட்டிடத்தின் தரைதளத்தில் செயல்பட்டு வந்த தனியார் மருத்துவமனையில் செய்யப்பட்டு வந்த சீரமைப்பு பணியே கட்டிட விபத்துக்கு காரணம் என்பது போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டது.

ஜாமீன் மனு தள்ளுபடி

இதையடுத்து அந்த மருத்துவமனையை நடத்தி வந்த சிவசேனா பிரமுகர் சுனில் சித்தாப் என்பவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். மேலும் சீரமைப்பு பணிகளை மேற்பார்வை செய்த காண்டிராக்டர் அனில் மண்டல் என்பவரும் கைதானார். சுனில் சித்தாப்பை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர்.

இதற்கிடையே அவர் ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவருக்கு ஜாமீன் வழங்க கோர்ட்டு மறுத்துவிட்டது.

இந்தநிலையில், சுனில் சித்தாப் தனக்கு ஜாமீன் வேண்டி மும்பை செசன்ஸ் கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை நேற்றுமுன்தினம் நடந்தது. அப்போது, நீதிபதி அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


Next Story