கூடுதலாக பணம் கேட்டு கொலைமிரட்டல் விடுத்ததாக வியாபாரி மனு
ரூ.9 லட்சம் கடன் கொடுத்துவிட்டு ரூ.77 லட்சம் கந்து வட்டி வசூலித்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் போலீஸ் கமிஷனரிடம் வியாபாரி புகார் மனு கொடுத்தார்.
கோவை,
கோவை பட்டணம்புதூரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 39). வியாபாரி. இவருடைய மனைவி மேரி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மணிகண்டன் தனது தொழில் விஷயமாக கோவை உடையாம்பாளையத்தை சேர்ந்த கம்யூனிஸ்டு கட்சி பிரமுகரான சுப்பிரமணி என்பவரிடம் ரூ.9 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
அந்த பணத்துக்கு மணிகண்டன் மாதந்தோறும் வட்டி செலுத்தி வந்தார். வாங்கிய தொகையை விட அதிகமாக வட்டி செலுத்திய பிறகும், சுப்பிரமணி மற்றும் சிலர் கூடுதலாக பணம் கேட்டு மணிகண் டன் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப் படுகிறது.
இந்த நிலையில், மணிகண்டன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நேற்று காலையில் வந்தார். அவர் போலீஸ் கமிஷனர் ஏ.அமல்ராஜை சந்தித்து கண்ணீர் மல்க ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நான் தொழில் விஷயமாக கடந்த 30-9-2012 அன்று உடையாம்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவரிடம் எனது சொத்து பத்திரத்தை கொடுத்து ரூ.9 லட்சம் கடன் வாங்கினேன். அதற்கு 10 நாள் வட்டி ரூ.45 ஆயிரம் வீதம் மாதந்தோறும் ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் செலுத்தி வந்தேன். இவ்வாறு கடந்த 57 மாதங்களுக்கு ரூ.76 லட்சத்து 95 ஆயிரம் கந்து வட்டியாக செலுத்திவிட்டேன்.
தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடந்த சில மாதங்களாக என்னால் வட்டி கொடுக்க முடிய வில்லை. இதனால் சுப்பிரமணி தனது நண்பர்களுடன் எனது வீட்டிற்கு வந்து பணம் கேட்டு மிரட்டினார். அதற்கு நான் வாங்கிய பணத்தைவிட பல மடங்கு அதிகமாக வட்டி செலுத்தி விட்டேன். எனவே என்னால் பணம் செலுத்த முடியாது என்று கூறினேன். ஆனால் அவர்கள் மேலும் ரூ.20 லட்சம் கொடுக்கவில்லை என்றால் குடும்பத்துடன் கொலை செய்துவிடுவதாக கூறி மிரட்டுகின்றனர். எனவே என்னிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டி வரும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுபோன்று கோவை சவுரிபாளையத்தை சேர்ந்த ரெஜிஸ்சாந்தகுமார், கார்த்திகேயன், உப்பிலிபாளையத்தை சேர்ந்த குருராசன், ராமநாதபுரத்தை சேர்ந்த விஜேந்திரபூபதி ஆகிய 4 பேரும் கோவை போலீஸ் கமிஷனர் ஏ.அமல்ராஜிடம் தனித்தனியாக புகார் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் சுப்பிரமணியிடம் முறையே ரூ.1 லட்சத்து 80 ஆயிரம், ரூ.9 லட்சம், ரூ.1 லட்சத்து 80 ஆயிரம், ரூ.50 ஆயிரம் கடன் வாங்கினோம். ஆனால் நாங்கள் இதுவரை வாங்கிய கடனுக்கு லட்சக்கணக்கில் பணம் செலுத்திவிட்டோம். ஆனாலும் அவர் மேற்கொண்டு கூடுதலாக பணம் கேட்டு மிரட்டி வருகிறார். மேலும் எங்களின் சொத்து பத்திரங்களையும் அவர் வாங்கி வைத்துக் கொண்டு கொடுக்கவில்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து, எங்கள் சொத்து பத்திரங்களை மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸ் கமிஷனர் ஏ.அமல்ராஜிடம் கேட்டபோது, ‘கந்துவட்டி குறித்து 5 பேர் கொடுத்த புகார் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது’ என்றார்.

Related Tags :
Next Story