பணம் மதிப்பு நீக்க நாளை கருப்பு தினமாக அனுசரித்து விழுப்புரம், செஞ்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பணம் மதிப்பு நீக்க நாளை கருப்பு தினமாக அனுசரித்து விழுப்புரம் மற்றும் செஞ்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரம்,
மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி 1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டனர். இந்த நாளை கருப்பு தினமாக அனுசரிக்கும் வகையில் நேற்று தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
அதன்படி விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய மாவட்ட தலைவர் ஆர்.டி.வி. சீனிவாசக்குமார் தலைமை தாங்கி பணம் மதிப்பு நீக்க நடவடிக்கையை கண்டித்து கண்டன உரையாற்றினார். விழுப்புரம் நகர தலைவர் செல்வராஜ் வரவேற்றார். மாவட்ட துணைத்தலைவர்கள் தயானந்தம், விஜயரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாநில செயலாளர் சிறுவை ராமமூர்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சிவா, வாசிம்ராஜா, ராஜாராம், மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவர் சுரேஷ்ராம், பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தலைவர் நாராயணசாமி, வட்டார தலைவர்கள் காசிநாதன், ராதா, அன்பு, காமராஜ், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் விஸ்வநாதன், தன்சிங், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஸ்ரீராம், துணைத்தலைவர் ராஜமாணிக்கம் உள்பட மாவட்ட, நகர, வட்டார நிர்வாகிகள் பலர் கருப்பு பட்டை, கருப்பு துண்டு அணிந்தவாறு கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள். முடிவில் மாவட்ட பொதுச்செயலாளர் ராஜ் குமார் நன்றி கூறினார்.
அதனை தொடர்ந்து விழுப்புரம் பழைய பஸ் நிலையம், காமராஜர் சாலை, புதிய பஸ் நிலையம், காந்தி சிலை உள்ளிட்ட இடங்களில் மத்திய அரசின் மக்கள் விரோத செயல்களை விளக்கும் வகையில் மாவட்ட தலைவர் ஆர்.டி.வி. சீனிவாசக்குமார், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார். தொடர்ந்து, பணம் மதிப்பிழப்பு மூலம் ஏ.டி.எம். மையங் கள், வங்கிகளின் முன்பு வரிசையில் நின்று உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு அருகில் காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
இதேபோல் செஞ்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் தினகரன் வரவேற்றார். மாவட்ட துணை தலைவர் சண்முகம், வட்டார தலைவர் சரவணன், நகர தலைவர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் விஷ்ணுபிரசாந்த், சொத்து பாதுகாப்புகுழு உறுப்பினர் வக்கீல் பூபதி ஆகியோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கண்டன உரையாற்றினர். இதில் வட்டார தலைவர்கள் கலைசெல்வன், ராஜவேலாயுதம், சுரேஷ், கண்ணன், கோவிந்தன், நகர தலைவர்கள் விநாயகம், இளையபெருமாள், நிர்வாகிகள் சூரியமூர்த்தி, அந்தோணிமேரி, பழனிவேல், விவசாய அணி மாவட்ட தலைவர் ஜோலாதாஸ், ரமேஷ், முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story