மத்திய அரசை கண்டித்து தி.மு.க.சார்பில் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து தி.மு.க.சார்பில் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம், பல்வேறு கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு
திருப்பூர்,
பண மதிப்பிழப்பினால் இந்திய பொருளாதாரத்தை சீரழித்த பா.ஜனதா அரசை கண்டித்து நவம்பர் 8-ந்தேதியை கருப்பு தினமாக கடைபிடித்து தி.மு.க. சார்பில் நேற்று காலை கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் திருப்பூர் குமரன் சிலை முன் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் தலைமை தாங்கி பேசினார். பண மதிப்பிழப்பினால் பொதுமக்கள் மற்றும் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் பேசினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கருப்பு சட்டை மற்றும் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர். பெண்கள் கருப்பு சேலை அணிந்து கலந்து கொண்டனர். மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் எல்.பி.எப். மாநில துணைத்தலைவர் கோவிந்தசாமி, துணை செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், தி.மு.க. சார்பில் மேங்கோ பழனிசாமி, ராஜ்மோகன்குமார், தங்கராஜ், ராமதாஸ், முருகேசன், சிவசுப்பிரமணியம், காங்கிரஸ் சார்பில் கிருஷ்ணன், கொ.ம.தே.க. சார்பில் ரோபோ ரவிச்சந்திரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் முஸ்தபா, ம.ம.க. சார்பில் ஹாலிதீன், பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் ஈஸ்வரன், திராவிடர் கழகம் சார்பில் ஆறுச்சாமி, உழவர் உழைப்பாளர் கட்சி சார்பில் ஜீவா கிட்டு, ஆதித்தமிழர் பேரவை சார்பில் சோழன், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் காளிமுத்து உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story