சுகாதார ஆய்வாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


சுகாதார ஆய்வாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Nov 2017 3:45 AM IST (Updated: 9 Nov 2017 2:56 AM IST)
t-max-icont-min-icon

சுகாதார ஆய்வாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பெரம்பலூர் கலெக்டர் அலுவலக பிரதான நுழைவு வாயில் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜ்குமார் வரவேற்று பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஆளவந்தார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ஒரு சுகாதார துணை மையத்திற்கு ஒரு சுகாதார ஆய்வாளர் என்கிற விகிதத்தில் பணியிடங்களை உருவாக்கி பணி நியமனம் செய்திட வேண்டும். டெங்கு தடுப்பு களப்பணியில் உள்ள பிரச்சினைகளை முறைப்படுத்தி, களப்பணி நேரத்தினை ஒழுங்குபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முருகேசன், வெங்கடாசலம், கலியமூர்த்தி, செல்வபாண்டியன் உள்பட சுகாதார ஆய்வாளர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ரவிசுந்தர் நன்றி கூறினார். 

Next Story