அனுமதியின்றி ஆற்றில் மணல் ஏற்றி வந்த 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்


அனுமதியின்றி ஆற்றில் மணல் ஏற்றி வந்த 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 9 Nov 2017 4:30 AM IST (Updated: 9 Nov 2017 2:57 AM IST)
t-max-icont-min-icon

அனுமதியின்றி ஆற்றில் மணல் ஏற்றி வந்த 5 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தஞ்சாவூர்,

தஞ்சை வெண்ணாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக தஞ்சை வருவாய் கோட்ட அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வருவாய் கோட்ட அலுவலர் (ஆர்.டி.ஓ.) சுரேஷ் தலைமையில் தாசில்தார் தங்கபிரபாகரன் மற்றும் போலீசார் தஞ்சை கொடிமரத்துமூலை, கரந்தட்டாங்குடி, பள்ளியக்ரஹாரம் ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஆற்று மணலை ஏற்றிக் கொண்டு 5 மாட்டு வண்டிகள் வந்து கொண்டிருந்தன. அந்த மாட்டு வண்டிகளை போலீசார் நிறுத்தி, அதன் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், வெண்ணாற்றில் இருந்து அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது.

மாட்டு வண்டிகள் பறிமுதல்

இதையடுத்து 5 மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டு தஞ்சை வருவாய் கோட்ட அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதையடுத்து மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டி உரிமையாளர்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். விசாரணையின் முடிவில் மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரத்துக்கு மேல் அபராதம் விதிக்கப்பட இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

Next Story