திருத்துறைப்பூண்டி அருகே சேதமடைந்த சாலையில் நாற்று நட்டு நூதன போராட்டம்


திருத்துறைப்பூண்டி அருகே சேதமடைந்த சாலையில் நாற்று நட்டு நூதன போராட்டம்
x
தினத்தந்தி 9 Nov 2017 4:15 AM IST (Updated: 9 Nov 2017 2:57 AM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டி அருகே சேதமடைந்த சாலையில் நாற்று நட்டு தேவந்திரகுல மக்கள் எழுச்சி இயக்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே சிங்களாந்தி பகுதியில் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. தற்போது மழை பெய்து வருவதால் இந்த சாலை மிகவும் மோசமாக சேதம் அடைந்துள்ளது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், இரு சக்கர வாகனத்தில் செல்வோர் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த சாலை கடந்த 15 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பலமுறை புகார் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை கண்டித்து தேவந்திர குல மக்கள் எழுச்சி இயக்கத்தின் சார்பில் சேதமடைந்த சாலையில் நாற்று நடும் நூதன போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு இயக்க மாநில தலைவர் சிங்கை.சரவணசோழன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் அருட்செல்வன் முன்னிலை வகித்தார்.

இதில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த சேதமடைந்த சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என அந்த பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். 

Related Tags :
Next Story