மணவாளக்குறிச்சி அருகே கந்து வட்டி புகாரில் நிதி நிறுவன உரிமையாளர் கைது


மணவாளக்குறிச்சி அருகே கந்து வட்டி புகாரில் நிதி நிறுவன உரிமையாளர் கைது
x
தினத்தந்தி 9 Nov 2017 3:45 AM IST (Updated: 9 Nov 2017 2:58 AM IST)
t-max-icont-min-icon

மணவாளக்குறிச்சி அருகே கந்து வட்டி புகாரில் நிதி நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

மணவாளக்குறிச்சி,

மணவாளக்குறிச்சியை அடுத்த படர்நிலம் பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 47). இவர், தற்போது சென்னையில் பழக்கடை நடத்தி வருகிறார். தனது வியாபார தேவைக்காக பெரியவிளை பகுதியில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வரும் ஜெகன் (35) என்பவரிடம் இருந்து கடந்த 2013–ம் ஆண்டு ரூ.3 லட்சம் கடன் வாங்கினார்.

இதற்காக அவரது 8 சென்ட் காலிமனையை அடமானமாக எழுதிக்கொடுத்தார். மேலும், மாதந்தோறும் ரூ.15 ஆயிரம் வட்டியும் கட்டி வந்தார்.

கைது

இதற்கிடையே ஜெகன், மகாலிங்கத்தை தொடர்பு கொண்டு உங்களுடைய 21 சென்ட் இடத்துடன் கூடிய வீட்டை எழுதி தரவேண்டும் என கேட்டுள்ளார். இல்லையெனில் கொன்று விடுவதாக மிரட்டினார்.

இதுபற்றி மகாலிங்கம் மண்டைக்காடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், சப்–இன்ஸ்பெக்டர் நாராயண பெருமாள் ஆகியோர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், கந்து வட்டி வசூலித்ததாக ஜெகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கந்து வட்டி புகாரில் நிதி நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.


Related Tags :
Next Story