பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் ஒரு ஆண்டு நிறைவு பா.ஜ.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் ஒரு ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக திருவள்ளூர் பஜாரில் பா.ஜ.க.வினர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.
திருவள்ளூர்,
கருப்பு பணத்தை ஓழிக்கும் விதமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி ரூ.1,000, ரூ.500 நோட்டுக்கள் செல்லாது என அதிரடியாக அறிவித்தார். இந்த நிலையில் நேற்று பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் ஒரு ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக திருவள்ளூர் பஜாரில் பா.ஜ.க.வினர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு பா.ஜ.க. திருவள்ளூர் நகர தலைவர் வி.எஸ்.ரகுராமன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர்கள் ராஜ்குமார், மதுசூதனன், மாவட்ட செயலாளர்கள் பாலாஜி, கருணாகரன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைபாண்டியன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆர்யா சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவள்ளூர் மாவட்ட தலைவர் லோகநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இனிப்புகளை வழங்கினார்.
Related Tags :
Next Story