சீரடி சாய்பாபாவின் புனித பாதுகைகள் தரிசனத்துக்கு வைக்கப்படுகிறது


சீரடி சாய்பாபாவின் புனித பாதுகைகள் தரிசனத்துக்கு வைக்கப்படுகிறது
x
தினத்தந்தி 9 Nov 2017 2:00 PM IST (Updated: 9 Nov 2017 12:15 PM IST)
t-max-icont-min-icon

சீரடி சாய்பாபாவின் புனித பாதுகைகள் கோவையில் பக்தர் களின் தரிசனத்துக்காக வருகிற 12 மற்றும் 13-ந்தேதி வைக்கப்படுகிறது.

கோவை,

கோவை சாய்பாபா கோவிலை நிர்வகிக்கும், ஸ்ரீநாகசாயி அறக்கட்டளையின் துணைத்தலைவர் பாலசுப்பிரமணியம், செயலாளர் சு.பாலசுப்பிரமணியம் ஆகியோர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

மராட்டிய மாநிலம் சீரடியில், சாய்பாபாவின் சமாதி உள்ளது. அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் 18-ந்தேதி சீரடி சாய்பாபா சமாதி நூற்றாண்டு நிறைவு அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி உலகமெங்கும் வாழும் சீரடி சாய்பாபாவின் பக்தர்களால் கடந்த அக்டோபர் மாதம் 1-ந்தேதி முதல் அடுத்த ஆண்டு அக்டோபர் 18-ந்தேதிவரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியின் ஒருபகுதியாக சீரடி சாய்பாபாவின் புனித பாதுகைகள் கோவைக்கு முதன்முறையாக எடுத்து வரப்பட்டு மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபா கோவிலில் பக்தர்களின் தரிசனத்துக்காக வைக்கப்படு கிறது.

வருகிற 12 மற்றும் 13-ந்தேதிகளில் காலை 7 மணி முதல் இரவு 10 மணிவரை பக்தர்கள், புனித பாதுகைகளை தரிசிக்கலாம். இதற்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதையொட்டி சிறப்பு தபால்உறையும் வெளியிடப்படுகிறது.ஸ்ரீநாகசாயி அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் சாதி, மத பாகுபாடின்றி 500 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.25 லட்சம் அளவுக்கு மருத்துவ உதவிகள் அளிக்கப்படுகிறது. தினமும் இலவச ஓமியோபதி மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். அப்போது அறக்கட்டளை நிர்வாகி ஜி.சுகுமார் உடன் இருந்தார்.

Next Story