15 ஆண்டுகளாக நிரம்பாத வெள்ளலூர் குளம் தூர்வாரும் பணி தீவிரம்
கோவை ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பு காரணமாக கடந்த 15 ஆண்டுகளாக வெள்ளலூர் குளம் நிரம்பவில்லை. தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோவை,
கோவை மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய குளங்களில் ஒன்று வெள்ளலூர் குளம்.பல இடங்களில் இருக்கும் சிறிய குட்டைகள்,குளங்கள் மழையால் நிரம்பும் போது அதிலிருந்து வெளியேறும் தண்ணீர் கால்வாய்கள் மூலமாகவந்து பெரிய நீர்வழி பாதையான ராஜ வாய்க்கால் மூலம் வெள்ளலூர் குளத்தை அடைகிறது. ஆனால் தற்போது பருவமழை பொய்த்து போனதாலும், நீர் வழித்தட ஆக்கிரமிப்பாலும் குளங்கள், குட்டைகள் உள்ளிட்ட நீர் நிலைகள் மெல்ல, மெல்ல அழிந்து வருகின்றன. குளங்கள் பழைய கட்டிட கழிவுகளை கொட்டி வைக்கும் இடமாக மாறி வருகின்றன. இதில் நீர்வழித்தட ஆக்கிரமிப்பு காரணமாக வெள்ளலூர் மற்றும் குறிச்சி குளம் கடந்த சில ஆண்டுகளாக நிரம்பவில்லை. இதில் வெள்ளலூர் குளத்துக்கு தண்ணீர் வரும் ராஜவாய்க்காலில் தற்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, தூர்வாரும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் கூறியதாவது:-
கோவை வெள்ளலூர் குளம் சுமார் 90 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளம் கடந்த 15 ஆண்டுகளாக நிரம்பவில்லை. இதற்கு முக்கிய காரணம் இந்த குளத்துக்கு தண்ணீர் வரும் ராஜவாய்க்காலை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டு இருந்தன. இந்த ராஜவாய்க்கால் அதிகபட்சம் 150 அடி முதல் 200 அடி வரை அகலம் கொண்டது. ஆனால் ஆக்கிரமிப்பு காரணமாக வெறும் 30 அடியாக குறைந்து விட்டது. பொதுப்பணித்துறையினர், குடிசை மாற்று வாரியத்தினர் இணைந்து கணக்கெடுப்பு நடத்தியதில் ராஜவாய்க்காலை ஒட்டி 1,600 வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்தன. இதில் 1,400 வீடுகளுக்கு மாற்றிடம் வழங்கப்பட்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மீதம் உள்ள 200 வீடுகளுக்கு அறிவொளி நகரில் மாற்று குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது.
ராஜவாய்க்கால் மொத்தம் 7½ கிலோ மீட்டர் தூரம் கொண்டது. இதில் 5 கி.மீ. தூரத்துக்கு ஆக்கிரமிப்புகள் உள்ளன. தற்போது வீடுகள் இடித்து அகற்றப்பட்டு உள்ளதால் ராஜவாய்க்காலை தூர்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதில் 2¼ கி.மீ. தூரத்துக்கு தூர்வாரும் பணி நிறைவடைந்து விட்டது. மீதம் உள்ள பணிகளை இன்னும் 2 வாரத்துக்குள் முடிக்க திட்டமிட்டு உள்ளோம்.
இந்த பணிகள் முடிவடைந்ததும் வெள்ளலூர் குளத்துக்கு தண்ணீர் தடையின்றி செல்லும். இதனால் தற்போது பெய்யும் வட கிழக்கு பருவமழையால் இந்த குளம் நிரம்ப வாய்ப்பு உள்ளது. வெள்ளலூர் குளம் தவிர கோவை பேரூர் பெரிய குளம், செங்குளம், குறிச்சி குளம் உள்ளிட்ட குளங்களும் நிரம்பவில்லை. இதில் குறிச்சி குளம் சுமார் 350 ஏக்கர் பரப்பளவு கொண்டது. தற்போது இந்த குளத்துக்கு தண்ணீர் வரும் வாய்க்கால் சீரமைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ராஜவாய்க்கால் தற்போது தூர்வாரப்பட்டு வந்தாலும், இதன் தண்ணீர் செல்லும் பாதையில் ஆகாய தாமரைகள் வளர்ந்து காணப்படுகின்றன. இதனால் மழை பெய்தாலும் தண்ணீர் செல்வதில் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இந்த ஆகாய தாமரைகளையும் அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Related Tags :
Next Story