சீனாவுக்கு பதிலடி கொடுக்க தயாராகிறது, இந்தியன் ரெயில்வே
இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பிரச்சினை இன்னும் முழுமையாக தீர்த்துக் கொள்ளப்படாத நிலையில் எல்லைப் பிரச்சினையை காரணம் காட்டி நம்மை வம்புக்கு இழுக்கிறது அண்டை நாடான சீனா.
சமீபத்தில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் அருணாசல பிரதேசத்துக்கு சென்று வந்ததற்குக்கூட சீனா மிரட்டும் வகையில் கண்டனம் தெரிவித்தது.
நிலப்பரப்பு, மக்கள் தொகை, ஆயுதபலம் என அனைத்திலும் நம்மை விட குறைந்த பலமே கொண்ட பாகிஸ்தானை நாம் பொருட்படுத்த தேவை இல்லை.
ஆனால் சீனாவின் மிரட்டலை எளிதாக விட்டுத்தள்ளி விட முடியாது.
மக்கள் தொகை, ராணுவ ஆயுதபலம் என அனைத்திலும் நம்மை விட பலம் வாய்ந்த பக்கத்து நாடான சீனா நமது நாட்டின் ஒரு பகுதியான சிக்கிம் மாநிலத்தின் அருகே இந்தியா- சீனா- பூடான் நாடுகளின் எல்லைப்பகுதிகள் சங்கமிக்கும் முச்சந்திப்பான டோகாலா என்ற பகுதியை ஆக்கிரமித்து, செஞ்சீனப்படைகள் அங்கு சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.
இந்த சூழலில் சாலை வழியாக மிரட்டும் சீனாவை எதிர்கொள்ள தயாராகி வருகிறது இந்தியன் ரெயில்வே.
இதற்காக 14 புதிய பாதைகள் கொண்ட நீண்ட எல்லையோர ரெயில் பாதையை அமைக்க நமது நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் ரெயில்வேயின் உதவியுடன் திட்டமிட்டு உள்ளது.
2019-ம் ஆண்டுக்குள் 3 கட்டங்களாக சர்வே நடத்தி பணியை தொடங்க இருக்கிறது. இந்திய ரெயில்வேயின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை பிரிவு இதற்கான சர்வேயை மேற்கொள்ள இருக்கிறது.
ஜம்மு காஷ்மீர் லேக் பிலாஸ்ப்பூர், மிஸாமரி தவாங், வடக்கு லஹிம்பூர் சிலாபதார், பஸிகாட் ருபாய் என நான்கு பாதைகள் முதல் கட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
இவற்றில் அமைக்கப்பட உள்ள ரெயில் பாதைகளின் மொத்த நீளம் 498 கி.மீ. சர்வேயை துவக்க பாதுகாப்பு அமைச்சகம் ரூ.157.77 கோடி நிதியை ஒதுக்கி உள்ளது. முதல்கட்ட பாதை கடல் மட்டத்தில் இருந்து 10 ஆயிரத்து 826 அடி உயரத்தில் அமையும். டாண்டி, கீ லாங், கோக்ஸார், உப்சி போன்ற மலை நகரங்களை இது இணைக்கும்.
இந்த பாதை இமாசலபிரதேசம், காஷ்மீர் மாநிலங்களில் உள்ள பாகிஸ்தான் நேபாளம் எல்லையோரமாக அமையும்.
இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட பாதைகள் அசாம், அருணாசல பிரதேச மாநிலங்களில் சீன எல்லையோரம் அமையும்.
பெரு நாட்டில் கடல் மட்டத்தில் இருந்து 15 ஆயிரத்து 843 அடி உயரத்தில் உள்ள லிமா ஹூவான்கயோ இருப்பு பாதையே உலகில் மிக உயரமான ரெயில்பாதை என்ற சாதனை 1893-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை இருந்தது.
இந்தியாவை அச்சுறுத்த சீனா குவின்ஹாய்-திபெத் இடையே 16 ஆயிரத்து 627 அடி உயரத்தில் புதிய பாதை அமைத்தது. 2006-ம் ஆண்டு முதல் ரெயில்கள் இயக்கப்பட்டு வரும் சீனாவின் இந்த பாதையே உலகின் இப்போதைய மிக உயரமான பாதையாக உள்ளது.
சீனாவை மிஞ்சும் வகையில் நமது புதிய ரெயில் பாதை அமையும். இமயமலை தொடரில் ஒரு இடத்தில் 17 ஆயிரம் அடி உயரத்தை இந்த பாதை கடக்கும் என கணக்கிடப்பட்டு உள்ளது.
உயரத்தில் மட்டும் அல்ல. நம்மை மிரட்டும் சீனாவுக்கு மன ரீதியாகவும் ஒரு எச்சரிக்கையை கொடுக்கும் வகையில் இந்த ரெயில் பாதை அமையும் என்பதில் ஐயமில்லை.
இது தொடர்பாக தெற்கு ரெயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் துணை பொதுச்செயலாளர் மனோகரன் கூறுகையில், “எல்லையோர வடகிழக்கு மாநிலங்களின் ரெயில் சேவைக்கு என ஆண்டுதோறும் ரூ.5 ஆயிரம் கோடி மானியமாக அரசு செலவிட்டு வருகிறது. பிராந்திய வளர்ச்சி மற்றும் ராணுவ தளவாட போக்குவரத்திற்கு இந்த பகுதிகளில் புதிய பாதை மிக அவசியம். மேலும் கடும் பனிப்பொழிவு காரணமாக இந்த பகுதிகளில் சாலை போக்குவரத்து வருடத்தில் ஏழு மாதங்கள் முடங்கி விடுகிறது. பாதுகாப்பு அமைச்சகம் ரெயில்வே துணையுடன் மேற்கொள்ளும் உலகின் மிக உயரமான எல்லையோர இமாலயன் ரெயில் திட்டம் வரவேற்கத்தக்கது” என்றார்.
-திருச்சி பொன்னிறைவன்.

Related Tags :
Next Story