வால்பாறையில் பார்வையை மறைக்கும் மூடுபனி மலைப்பாதையில் வாகன ஓட்டிகள் அவதி
வால்பாறையில் பார்வையை மறைக்கும் மூடுபனி காரணமாக மலைப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப் படுகின்றனர்.
வால்பாறை,
வால்பாறை பகுதியில் மார்ச்முதல் மே மாதம் வரை கோடைகாலம் நிலவியது. அதனை தொடர்ந்து ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை காலம் நிலவியது. இந்த நிலையில் தற்போது வால்பாறைக்கு அதிகளவில் சுற்றுலாபயணிகளை வரவழைக்க கூடிய பனியும் குளிரும் கலந்த காலசூழ்நிலை தொடங்கிவிட்டது. இதனால் வரும் காலங்களில் அதிகளவு சுற்றுலாபயணிகள் வால்பாறைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பனியும் குளிரும் கலந்த காலசூழ்நிலை காரணமாக வால்பாறை பகுதியில் குளிர்கால பூக்களும் பூக்கத்தொடங்கி விட்டன.
வால்பாறை பொள்ளாச்சி சாலையின் ஓரத்தில் சூரிய காந்தி பூவைப்போல மஞ்சள் நிறத்தில் குளிர்காலத்தில் மட்டும் பூக்கும் பனிக்கால பூக்கள் பூத்து குலுங்குகின்றன. இதே போல வால்பாறை பகுதியில் பகல் நேரத்திலும் மூடுபனி நிலவி வருகின்றது. இதனால் பகல் நேரத்தில் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டப்படி வாகனங்களை ஓட்டும் நிலை உள்ளது. அதிகாலை நேரத்திலும் இரவு நேரங்களிலும் அனைத்து எஸ்டேட் பகுதிகளிலும் பனிப்பொழிவு உள்ளதால், குறிப்பாக அய்யர்பாடி எஸ்டேட் முதல் வாட்டர்பால் எஸ்டேட் வரை பகல் நேரத்திலேயே அதிகளவில் கடுங்குளிர் நிலவி வருகின்றது. இது குறித்து போலீசார் கூறியதாவது:-
வால்பாறை பகுதிக்கு வெளியூர்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் வரும் சுற்றுலாபயணிகள் நள்ளிரவு நேரங்களிலும், அதிகாலை நேரங்களிலும் மிகவும் கவனமாக வாகனங்களை ஓட்டிச் செல்லவேண்டும். அதிக வேகத்தில் வாகனங்களை ஓட்டக்கூடாது. மலைப்பாதையில் மூடுபனி காரணமாக வாகனங்களை ஓட்டுவது அனுபவமில்லாதவர்களுக்கு சற்று கடினமாக இருக்கும். இதனால் விபத்துகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. எனவே பனி படரும் பகுதியில் வாகனங்களை கவனமாக ஓட்டவேண்டும். வாகனங்களை முந்திச்செல்ல வேண்டும் என்கிற எண்ணத்தில் வாகனத்தை ஓட்டிச்செல்லக்கூடாது. பார்த்து ரசிக்க கூடிய வகையில் ஒருபுறம் அழகான பூக்கள் பூத்திருந்தாலும், மறுபுறம் பார்வையை மறைக்கும் மூடுபனி காத்திருக்கிறது என்பதையும் வாகன ஓட்டிகள் உணரவேண்டும். ஏற்கனவே இதுபோன்ற பனிக்காலங்களில் வால்பாறை சாலையில் வழக்கத்தை விட அதிக விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Tags :
Next Story