நெல்லை சந்திப்பில் பரிதாபம் பஸ் மோதி பள்ளிக்கூட சிறுவன் பலி
நெல்லை சந்திப்பில் பஸ் மோதி பள்ளிக்கூட சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
நெல்லை,
நெல்லை சந்திப்பில் பஸ் மோதி பள்ளிக்கூட சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
பள்ளிக்கூட மாணவன்நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் அண்ணாநகரை சேர்ந்தவர் வைரவமூர்த்தி. இவருடைய மகன் கருப்பசாமி (வயது 12). இவன் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் விடுதியில் தங்கி 7–ம் வகுப்பு படித்து வந்தான்.
கருப்பசாமிக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது. இதனால் அவன் விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டில் இருந்தான். நேற்று சிந்துபூந்துறையில் உள்ள தன்னுடைய நண்பர்களை பார்ப்பதற்காக கருப்பசாமி சைக்கிளில் சிந்துபூந்துறைக்கு சென்றான்.
பஸ் மோதியதுநெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் முன்பாக சைக்கிளில் சென்ற போது அந்த வழியாக வந்த தனியார் பஸ், சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கருப்பசாமி படுகாயம் அடைந்தான். உடனே சம்பவ இடத்துக்கு ஆம்புலன்சு வேன் வரவழைக்கப்பட்டது. அதன்மூலம் காயம் அடைந்த சிறுவன் கருப்பசாமி, பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டான். அவனை பரிசோதனை செய்த டாக்டர்கள், கருப்பசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
டிரைவரிடம் விசாரணைஇதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் பஸ் மோதி பள்ளிக்கூட சிறுவன் பலியான சம்பவம் நெல்லை சந்திப்பில் சோகத்தை ஏற்படுத்தியது.