கைலாசநாதர் கோவிலில் 3 வெண்கல சிலைகள் திருட்டு மேலும் 2 கோவில்களில் உண்டியல் உடைப்பு
தலைவாசல் அருகே உள்ள கைலாசநாதர் கோவிலில் 3 வெண்கல சிலைகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்றுள்ளனர். மேலும், 2 கோவில்களில் உண்டியல்கள் உடைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைவாசல்,
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே காமக்காபாளையம் கிராமத்தில் கைலாசநாதர் கோவில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தினமும் வந்து வழிபட்டு செல்வதுண்டு. அதே பகுதியில் வசிக்கும் செல்வமணி (வயது 55) என்பவர் கோவில் பூசாரியாக உள்ளார். இவர், நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இதனை தொடர்ந்து அவர் நேற்று காலை கோவிலின் நடை திறக்க வந்தார்.
அப்போது, கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பிறகு உள்ளே சென்றுபார்த்தபோது, 3 வெண்கல சிலைகள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. அவை சிவகாம சுந்தரி, காமாட்சி அம்மன், சண்டிகேஸ்வரர் சாமி சிலைகள் ஆகும். கோவிலில் இருந்த உண்டியல் ஏதும் உடைக்கப்படவில்லை. இதுபற்றிய தகவல் அப்பகுதியில் பரவியதால் கிராம மக்கள் கோவிலுக்கு திரண்டு வந்தனர்.
இதுகுறித்து தலைவாசல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல்பாண்டியன், கோவில் செயல் அலுவலர் சுரேஷ்குமார், கிராம நிர்வாக அலுவலர் மணிமாறன், காட்டுக்கோட்டை வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் அங்கு வந்து வெண்கல சிலைகள் திருட்டு போன இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இதேபோல், நத்தக்கரை மாரியம்மன் கோவிலுக்குள் புகுந்த மர்ம ஆசாமிகள், அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்தும், பித்தளை குடம், குத்துவிளக்கு உள்ளிட்ட பொருட்களையும் அள்ளி சென்றுள்ளனர். மேலும், நத்தக்கரை டோல்கேட் பகுதியில் உள்ள கருமாரியம்மன் கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியலும் உடைக்கப்பட்டுள்ளது. உண்டியலில் இருந்த பணம் மற்றும் பூஜை பொருட்களையும் மர்ம ஆசாமிகள் திருடி சென்றிருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தலைவாசல் அருகே இலுப்பநத்தம் காளியம்மன் கோவில், வேப்பம்பூண்டியில் உள்ள செல்லியம்மன் கோவிலில் கடந்த வாரம் மர்ம ஆசாமிகள் புகுந்து பூஜை பொருட்களை திருடி சென்றுள்ளனர்.
தற்போது அடுத்தடுத்து மேலும் 3 கோவில்களில் திருட்டு சம்பவம் நடந்திருப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story