எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பந்தக்கால் நடும் நிகழ்ச்சி அமைச்சர் துரைக்கண்ணு- வைத்திலிங்கம் எம்.பி. பங்கேற்பு
தஞ்சையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் துரைக்கண்ணு, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்,
அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா வருகிற 29-ந்தேதி தஞ்சையில் நடைபெறுகிறது. இதற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மாநகராட்சி மைதானத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் பரசுராமன், பாரதிமோகன், சேகர் எம்.எல்.ஏ., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் அமைச்சர் துரைக்கண்ணு, மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு பந்தக்காலை நட்டனர். முன்னதாக தஞ்சை புதிய பஸ் நிலையத்திலிருந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மினி மாரத்தான் போட்டியினையும் தொடங்கிவைத்தனர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டி புதிய பஸ் நிலையத்தில் தொடங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நிறைவடைந்தது.
அதனை தொடர்ந்து பஸ்நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் எம்.ஜி.ஆரின் சிறப்பு புகைப்பட கண்காட்சியினையும், தஞ்சை மாவட்டம் முழுவதும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா விளம்பர பணிகள் மேற்கொள்ள அதிநவீன வாகனத்தின் மூலம் எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள், பாடல்கள், பொதுநிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யும் வாகனத்தினையும் அமைச்சர் துரைக்கண்ணு, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பின்னர், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு மைதானத்தின் எதிரே மன்னர் சரபோஜி கலைக்கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட உள்ள வாகன நிறுத்துமிடத்தினையும், விழா நடைபெறும் இடத்தினையும் பார்வையிட்டனர். அதனை தொடர்ந்து புதிய பஸ் நிலையத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவினை குறிக்கும் வகையில் ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சுப்பிரமணியன், ரெத்தினசாமி, ராம.ராமநாதன், ஒருங்கிணைந்த பால் கூட்டுறவு சங்கத் தலைவர் காந்தி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், நிக்சல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் அறிவுடைநம்பி, துணைத்தலைவர் புண்ணியமூர்த்தி, இயக்குனர் வக்கீல் சரவணன், நிலவள வங்கித் தலைவர் துரை.வீரணன், முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் சாமிவேல், முன்னாள் மேயர் சாவித்திரிகோபால், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவி அமுதா ரவிச்சந்திரன் மற்றும் அ.தி.மு.க. பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் வைத்திலிங்கம் எம்.பி. நிருபர்களிடம் கூறுகையில், “எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்த போது ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரம் உயர பாடுபட்டவர் ஆவார். அரசியலில் செய்த சாதனைகளுக்கும் மேல் திரைப்படங்கள் மூலம் பல்வேறு சாதனைகளை செய்து வள்ளல் என பெயர் பெற்றவர். தஞ்சைக்கு தமிழ்ப்பல்கலைக்கழகத்தை ஏற்படுத்தி பெருமை சேர்த்த எம்.ஜி.ஆருக்கு நூற்றாண்டு விழா நடத்துவது அவருக்கு மேலும் புகழ் சேர்ப்பது ஆகும். அவரது நூற்றாண்டு விழாவை தஞ்சையில் சிறப்பாக நடத்துவோம்”என்றார்.

Related Tags :
Next Story