மதுரை செக்கானூரணி பகுதியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு


மதுரை செக்கானூரணி பகுதியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு
x
தினத்தந்தி 10 Nov 2017 4:30 AM IST (Updated: 10 Nov 2017 1:32 AM IST)
t-max-icont-min-icon

மதுரை செக்கானூரணி பகுதியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

மதுரை,

தேனி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். அங்கு அவரை அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் மற்றும் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ., கலெக்டர் வீரராகவராவ் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் காரில் தேனி செல்லும் வழியில் மதுரை மாவட்டம் செக்கானூரணி பகுதிக்கு வந்தார்.

அங்கு அவரை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். வழிநெடுக பெண்களும், பொதுமக்களும் முதல்-அமைச்சரை பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். மேலும் மேளதாளம் முழங்க மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு கோவில்களின் பிரசாதங்கள் முதல்-அமைச்சருக்கு வழங்கப்பட்டன.

அதை தொடர்ந்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் கரகாட்டம், ஒயிலாட்டத்துடன் முத்துராமலிங்கத்தேவர் சிலை அருகே வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அமைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவ படத்திற்கு முதல்-அமைச்சர் மாலை அணிவித்தார். பின்னர் தேனி சாலையில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.போஸ், மாணிக்கம், சரவணன், நீதிபதி, பெரியபுள்ளான், மாவட்ட துணை செயலாளர் அய்யப்பன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முத்துராமலிங்கம், தமிழரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story