தனியார் குடிநீர் விற்பனை நிறுவனங்களை மூடக்கோரி சாலை மறியல் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


தனியார் குடிநீர் விற்பனை நிறுவனங்களை மூடக்கோரி சாலை மறியல் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 10 Nov 2017 4:30 AM IST (Updated: 10 Nov 2017 1:32 AM IST)
t-max-icont-min-icon

மதுரை அருகே பரவையில் தனியார் குடிநீர் விற்பனை நிறு வனங்களை மூடக்கோரி பொதுமக்கள் நடத்திய சாலைமறியல் போராட்டத்தினால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வாடிப்பட்டி,

மதுரை சமயநல்லூர் அருகே பரவை பேரூராட்சி பகுதியில் 8 தனியார் குடிநீர் விற்பனை நிறுவனங்கள் உள்ளது.

இந்த நிறுவனங்கள் அனைத்தும் வைகை ஆற்றின் கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ளதால் நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்படும் என்பதால் பலமுறை நிறுவனங்களை மூட நட வடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

சாலை மறியல்

இந்தநிலையில் நேற்று காலை பரவை பஸ்நிறுத்தம் அருகில் மதுரை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பாரதீய ஜனதா, நாம் தமிழர் கட்சி, கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தனியார் குடிநீர் விற்பனை நிலையங்களை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த மதுரை வடக்கு தாசில்தார் சிவக்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் தனபால், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரிட்டோ மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் அரசு அனுமதியின்றி நடத்தி வந்த தனியார் குடிநீர் விற்பனை நிறு வனங்களை தடைசெய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

இதைதொடர்ந்து சுமார் 2 மணி நேரம் நடந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. 

Related Tags :
Next Story