பெட்டவாய்த்தலையில் கார் மோதி பிளஸ்-1 மாணவர் பலி
பெட்டவாய்த்தலையி்ல் கார் மோதியதில் பிளஸ்-1 மாணவர் பலியானார். அவரது உடலுக்கு மாணவ, மாணவிகள் அஞ்சலி செலுத்தினர்.
பெட்டவாய்த்தலை,
திருச்சி மாவட்்டம் பெட்டவாய்த்தலை எஸ்.புதுக் கோட்டையை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகன் சந்துரு (வயது16). இவர் ரத்தினா மேல் நிலைப்பள்ளி யில் பிளஸ்-1 படித்து வந்தார். அதே ஊரைச் சேர்ந்த மருத முத்து மகன் மணிகண்டன் (17). இவர் அதே பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவர்கள் இருவரும் நேற்று காலை 8.30 மணியளவில் பள்ளிக்கு நடந்து வந்து கொண்டிருந்தனர்.
கார் மோதி சாவு
பள்ளி அருகே வந்த போது திருச்சியில் இருந்து கோவை நோக்கி சென்ற கார் சந்துரு, மணிகண்டன் இருவர் மீதும் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சந்துரு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். படுகாயமடைந்த மணிகண் டனை சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். பலியான சந்துரு வின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து பெட்டவாய்த்தலை போலீ சார் வழக்கு பதிவு செய்து காரை ஓட்டி வந்த கோவை கீழராஜவீதியை சேர்ந்த ஜனார்த்தனன் மகன் சத்ய நாராயணனை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கைதான சத்ய நாராயணனுக்கு திரு மணமாகி ஒரு வாரம் ஆகிறது. கோவையில் இன்று நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சிக்காக தனது மனைவியுடன் காரில் சென்ற போது இச்சம்பவம் நடை பெற்றது. தகவலறிந்த எஸ்.புதுக்கோட்டையை சேர்ந்த பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் பலியான மாணவரின் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் மாணவரின் உடலுக்கு அந்த பள்ளி மாணவ, மாணவிகள் அஞ்சலி செலுத்தினர். பிளஸ்-1 மாண வர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story