குடும்ப தகராறில் விபரீதம் ஒரு வயது ஆண் குழந்தையுடன், அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை
உன்சூர் டவுனில், குடும்ப தகராறில் ஒரு வயது ஆண் குழந்தையுடன், அரசு பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மைசூரு,
உன்சூர் டவுனில், குடும்ப தகராறில் ஒரு வயது ஆண் குழந்தையுடன், அரசு பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த விபரீத சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–
தூக்குப்போட்டு தற்கொலைமைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா முதகனநூறு கிராமத்தை சேர்ந்தவர் மகாலட்சுமி(வயது 27). இவருக்கு திருமணம் ஆகி கணவரும், ஒரு வயதில் ஆண் குழந்தையும் இருந்தது. மகாலட்சுமி உன்சூர் டவுனில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் மகாலட்சுமிக்கும், அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மகாலட்சுமி மனம் உடைந்து காணப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று காலையும் மகாலட்சுமிக்கும், அவரது கணவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த மகாலட்சுமி, தனது ஒரு வயது குழந்தையுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சோகம்இதுபற்றி அறிந்த உன்சூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மகாலட்சுமி, ஒரு வயது குழந்தையின் உடல்களை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது குடும்ப தகராறு காரணமாக மகாலட்சுமி, தனது ஒரு வயது குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுபற்றி உன்சூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் உன்சூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.