குஜிலியம்பாறை அருகே வரட்டாற்று ஓடையில் மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு
குஜிலியம்பாறை அருகே வரட்டாற்று ஓடையில் மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.
குஜிலியம்பாறை,
குஜிலியம்பாறை ஒன்றியம் ஆர்.கோம்பை மலையடிவார பகுதியில் மழைக்காலத்தில் ஆங்காங்கே சிற்றோடைகள் ஒன்று சேருகின்றன. அதில் இருந்து வெளியேறும் தண்ணீர், ரெட்டியபட்டி வரட்டாற்று ஓடை மூலம் சின்னழகுநாயக்கனூர், மாமரத்துச்சாலை, கோவிலூர், தங்கச்சியம்மாபட்டி, ஆர்.புதுக்கோட்டை வழியாக கூம்பூர் குடகனாற்றில் கலக்கிறது.
இந்தநிலையில் ஆர். கோம்பை பகுதியில் உள்ள கரட்டுச்சாலையூர், கோவிலூர், தங்கச்சியம்மாபட்டி, ராமநாதபுரம், ஆர்.புதுக் கோட்டை உள்ளிட்ட இடங்களில் வரட்டாற்று ஓடையில் பொக்லைன் எந்திரத்தை பயன்படுத்தி டிராக்டர் மற்றும் டிப்பர் லாரிகளில் மணல் அள்ளி செல்கின்றனர். அதனை மேடான பகுதியில் குவியல், குவியலாக வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
குடிநீர் தட்டுப்பாடு
இதுகுறித்து அப்பகுதி மக்கள் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. தொடர்ந்து மணல் அள்ளப்படுவதால் அந்த பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்கு சென்று விட்டது. குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது.
இதேபோல் குஜிலியம்பாறையில் உள்ள பெரிய குளத்திலும் இரவு, பகலாக மணல் அள்ளப்பட்டு வருகிறது. பொக்லைன் எந்திரம் மூலம் டிப்பர் லாரிகளில் மணலை அள்ளி செல்கின்றனர். எனவே குஜிலியம்பாறை ஒன்றிய பகுதியில் உள்ள நீர்நிலைகளில், கலெக்டர் டி.ஜி.வினய் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story