திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் தீ விபத்து தையல் எந்திரங்கள் சேதம்

திருப்பூர்,
திருப்பூர் வ.உ.சி.நகர் நகர் 5-வது வீதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவருடைய வீட்டின் மேல் மாடியில் ஓட்டு மேற்கூரை கட்டிடத்தில் பனியன் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த பனியன் நிறுவனத்தில் இருந்து நேற்று இரவு 9½ மணி அளவில் திடீரென்று புகை வந்துள்ளது. அருகில் இருந்தவர்கள் இதை கவனித்து அங்கு சென்று பார்த்தனர். அப்போது பனியன் நிறுவனத்துக்குள் தீப்பற்றி எரிந்தது தெரியவந்தது. உடனடியாக தீயணைக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர். மேலும் திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் பனியன் நிறுவனத்தில் இருந்த 5-க்கும் மேற்பட்ட தையல் எந்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமானது. சேதமதிப்பு பல லட்ச ரூபாய் மதிப்பில் இருக்கும் என்று கூறப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்டபோது பனியன் நிறுவனத்தில் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று இரவு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story