திருமானூர் அருகே மின்மாற்றியை பழுதுநீக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்


திருமானூர் அருகே மின்மாற்றியை பழுதுநீக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 10 Nov 2017 12:51 PM IST (Updated: 10 Nov 2017 2:02 PM IST)
t-max-icont-min-icon

திருமானூர் அருகே மின்மாற்றியை பழுது நீக்க கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருமானூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சேனாபதி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 1,500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் உள்ள மின்மாற்றி மூலம் பொது மக்களுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் மின்மாற்றி கடந்த 1 வாரத்துக்கு முன்பு பழுதாகி விட்டது. இது குறித்து கிராம மக்கள் மின் சாரத்துறை அலுவலகத்தில் பல முறை புகார் அளித்துள்ளனர். ஆனால் இது நாள் வரைக்கும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று சேனாபதி கிராமத்தில் முடிகொண்டான்-சேனாபதி சாலையில் அந்த வழியாக வந்த பஸ்சை மறித்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த திருமானூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் கிராம மக்கள் மின்சார வாரிய அதிகாரிகள் வரும் வரை மறியலை கைவிட மாட்டோம் என்று கூறி அங்கேயே இருந்தனர். அப்போது போலீசார் பஸ்சை மட்டும் அனுப்பி விடுங்கள், நாங்கள் இங்கே இருக்கிறோம் என்று கூறினர். இதையடுத்து கிராமமக்கள் பஸ்சை அனுப்பி விட்டனர். இதற்கிடையே போலீசார் மின்சார வாரிய அதி காரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து அங்கு வந்த மின்சார வாரிய அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடனடியாக மின்மாற் றியை பழுதுநீக்கி மின்வினியோகம் செய்யப்படும் என்று கூறியதையடுத்து கிராம மக் கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story