திண்டுக்கல்லில் அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


திண்டுக்கல்லில் அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Nov 2017 3:30 AM IST (Updated: 11 Nov 2017 1:19 AM IST)
t-max-icont-min-icon

அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில், திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

திண்டுக்கல்,

அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில், திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு திண்டுக்கல் கோட்ட தலைவர் மாணிக்கம் தலைமை தாங்கினார். செயலாளர் விஜயன், பொருளாளர் ராமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், 7–வது ஊதிய குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. கோரிக்கையை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.


Next Story