ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய செயல் தலைவராக பி.ஜி.ஆர்.சிந்தியா நியமனம் செய்யப்படுவார் தேவேகவுடா தகவல்
ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய செயல் தலைவராக பி.ஜி.ஆர்.சிந்தியா நியமனம் செய்யப்படுவார் என்று தேவேகவுடா கூறினார்.
பெங்களூரு,
ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய செயல் தலைவராக பி.ஜி.ஆர்.சிந்தியா நியமனம் செய்யப்படுவார் என்று தேவேகவுடா கூறினார்.
திப்பு ஜெயந்தி விழாஜனதா தளம்(எஸ்) சார்பில் திப்பு ஜெயந்தி விழா பெங்களூருவில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா கலந்து கொண்டு, விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:–
நாங்கள் கடந்த 25 ஆண்டுகளாக திப்பு ஜெயந்தி விழாவை நடத்தி வருகிறோம். நாம் இந்தியர்கள். அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும். திப்பு பற்றி நான் அதிகமாக ஆய்வு நடத்தவில்லை. தொடக்கப்பள்ளியில் இருந்தபோது நான் அவரை பற்றி படித்தேன். அதன் பிறகு அரசியல் பக்கம் அதிக கவனம் செலுத்தியதால் திப்புவை பற்றி படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
தேசிய செயல் தலைவராக...திப்பு பற்றி தலக்காடு சிக்கரங்கேகவுடா எழுதிய புத்தகத்தை அதிகமாக அச்சிட்டு மக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும். அதன் மூலம் திப்புவை பற்றி மக்கள் அறிந்துகொள்ள முடியும். அடுத்த ஆண்டு(2018) சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். அரசு சார்பில் திப்பு ஜெயந்தி விழாவை நடத்த வேண்டிய தேவை இல்லை.
ஆர்ப்பாட்டம், பதற்றம் ஏற்படுத்தக்கூடாது. ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய செயல் தலைவராக பி.ஜி.ஆர்.சிந்தியா நியமனம் செய்யப்படுவார்.
இவ்வாறு தேவேகவுடா கூறினார்.