ரெயிலில் இருந்து தவறி விழுந்து பலியான மத்திய பாதுகாப்பு படை வீரரின் உடலுக்கு போலீஸ் அதிகாரிகள் அஞ்சலி


ரெயிலில் இருந்து தவறி விழுந்து பலியான மத்திய பாதுகாப்பு படை வீரரின் உடலுக்கு போலீஸ் அதிகாரிகள் அஞ்சலி
x
தினத்தந்தி 11 Nov 2017 4:30 AM IST (Updated: 11 Nov 2017 3:13 AM IST)
t-max-icont-min-icon

ரெயிலில் இருந்து தவறி விழுந்து பலியான மத்திய பாதுகாப்பு படை வீரரின் உடலுக்கு போலீஸ் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

சேலம்,

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 42). மத்திய பாதுகாப்பு படை வீரரான இவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் பணியாற்றி வந்தார். சசிகுமார் 20 நாட்கள் விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்றார். பின்னர் விடுமுறை முடிந்து மீண்டும் பணிக்கு செல்வதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து புதுடெல்லி செல்லும் கேரளா எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தார்.

இந்த ரெயில் நேற்று முன்தினம் அதிகாலை சேலம் அருகே தின்னப்பட்டி–டேனீஸ்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தபோது, படிக்கட்டில் நின்று கொண்டிருந்த சசிகுமார் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து பலியானார். இதையடுத்து சேலம் ரெயில்வே போலீசார் அங்கு சென்று அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே நேற்று காலை சசிகுமாரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவருடைய உடலுக்கு தேசிய கொடி போர்த்தப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதையடுத்து அவருடைய உடலுக்கு போலீஸ் துணை கமி‌ஷனர் தங்கதுரை, உதவி கமி‌ஷனர்கள் அன்பு, பாலசுப்பிரமணியன் (நுண்ணறிவு பிரிவு) உள்ளிட்ட அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து சசிகுமார் உடலுக்கு மத்திய அதிவிரைவு படை கோவை 105–வது பட்டாலியன் இன்ஸ்பெக்டர் ஆல்பர்ட் தலைமையில் வீரர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவருடைய உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோட்டுக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.


Next Story