கே.கே.நகரில் நகைகள் திருட்டு போனதாக நாடகம் ஆடிய 2 பெண்கள் கைது


கே.கே.நகரில் நகைகள் திருட்டு போனதாக நாடகம் ஆடிய 2 பெண்கள் கைது
x
தினத்தந்தி 11 Nov 2017 3:35 AM IST (Updated: 11 Nov 2017 3:34 AM IST)
t-max-icont-min-icon

நகைகள் திருட்டு போனதாக நாடகம் ஆடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

சென்னை கே.கே.நகர் ஜீவானந்தா சாலையை சேர்ந்த பரமேஸ்வரி (வயது 43) என்ற பெண் கடந்த மாதம் 26-ந்தேதி கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதில் தனது தோழி மாலா வீட்டில் இருந்தபோது, தன்னையும், மாலாவையும் தாக்கி மர்ம நபர் ஒருவர் 10 பவுன் நகைகள், ரூ.12 ஆயிரத்து 500 பணம், 2 செல்போன்களை கொள்ளையடித்து விட்டதாக கூறி இருந்தார்.

இதையடுத்து விசாரணையை தொடங்கிய போலீசார் மாலாவின் செல்போனை ஆய்வு செய்தனர். அதில் குறிப்பிட்ட ஒரு எண்ணில் இருந்து பல தடவை அழைப்பு வந்திருந்தது. அந்த அழைப்பு விடுத்த எண் முசிறி ஸ்ரீகிருஷ்ணராஜபுரம் பகுதியை சேர்ந்த ரூபன் (34) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. ரூபன் விருகம்பாக்கத்தில் தங்கி சினிமாவில் துணை இயக்குனராகவும் பணியாற்றி வருவதும் தெரிய வந்தது.

போலீசார் விசாரணையில் விபசார தொழிலில் ஈடுபட்டு வரும் மாலாவிடம் உல்லாசம் அனுபவிக்க அவர் கூறியதின்பேரில் தோழி பரமேஸ்வரி வீட்டுக்கு வந்ததாகவும், அப்போது ஏற்பட்ட பண தகராறில் ஆத்திரம் அடைந்து செல்போன்களை மட்டுமே எடுத்து வந்ததாகவும் போலீசாரிடம் ரூபன் கூறினார்.

இதையடுத்து மாலா மற்றும் பரமேஸ்வரியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது ரூபனை பழிவாங்கவே பொய்யான குற்றச்சாட்டு கூறியது கண்டுபிடிக்கப்பட்டது. விபசாரத்தில் ஈடுபட்டதுடன் நகைகள் திருட்டு போனதாக நாடகம் ஆடிய மாலாவும், பரமேஸ்வரியும் நேற்று கைது செய்யப்பட்டனர். 

Next Story