இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக்கோரி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்


இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக்கோரி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 11 Nov 2017 11:28 AM IST (Updated: 11 Nov 2017 11:28 AM IST)
t-max-icont-min-icon

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக்கோரி காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட மீனவர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் அனைத்து மீனவர் சங்க கூட்டம் என்.ஜே.போஸ் தலைமையில் நடந்தது. இதில் மீனவர் சங்க தலைவர்கள் சேசு, எமரிட், சகாயம், தட்சிணாமூர்த்தி, தேவதாஸ் உள்பட அனைத்து மீனவர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளையும் உடனடியாக விடுவிக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தடைகால நிவாரண தொகை படகு உரிமையாளர்களுக்கு வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. அதனை படகு உரிமையாளர்களுக்கும் வழங்க வேண்டும். படகு உதிரி பாகங்கள், கருவாடு ஆகியவற்றுக்கு கூடுதல் ஜி.எஸ்.டி விதிப்பதால் தொழிலில் நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளது.

எனவே சரக்கு மற்றும் சேவை வரியை குறைக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (சனிக்கிழமை) முதல் அனைத்து படகுகளும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பாக அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனுக்களை அளிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. 

Next Story