பெரம்பலூர்: ரோட்டில் சிதறி கிடந்த விவசாயிகளின் ஒருங்கிணைந்த கையேடுகள்


பெரம்பலூர்: ரோட்டில் சிதறி கிடந்த விவசாயிகளின் ஒருங்கிணைந்த கையேடுகள்
x
தினத்தந்தி 11 Nov 2017 12:00 PM IST (Updated: 11 Nov 2017 11:58 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் அருகேயுள்ள செஞ்சேரி பாலத்தின் கீழ் பகுதியில் விவசாயிகளின் ஒருங்கிணைந்த கையேடுகள் சிதறிகிடந்தன.

பெரம்பலூர், 

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் மண்வளத்தை ஆய்வு செய்து பயிர்சாகுபடியை பெருக்கும் பொருட்டு உரிய ரசாயன உரங்களை பயன்படுத்துவதற்கான பரிந்துரையை விவசாயிகளுக்கு, வேளாண்மை துறையினர் ஆய்வுக்குபின் வழங்குகின்றனர். அந்த வகை யில் விவசாயியின் பெயர் விவரம், நிலத்தில் சாகுபடி செய்யப்படும் பயிர், வேளாண் தட்பவெப்ப மண்டலம் உள்ளிட்டவற்றை பதிவு செய்து மண் ஆய்வு முடிவுகள் குறித்த தகவலுடன் விவசாயிகளின் ஒருங்கிணைந்த கையேடு பராமரிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அந்த கையேடுகள் பெரம்பலூர் அருகே துறையூர் ரோட்டில் செஞ்சேரியில் உள்ள பாலத் தின் கீழ் பகுதியில் நேற்று சிதறி கிடந்தன. அந்த கையேடுகளில் பெயர், விவரம் உள்ளிட்டவை எழுதப்பட்டு மண் ஆய்வு பற்றிய தகவல்களும் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் அதில் விவசாயியின் புகைப் படம் ஏதும் ஒட்டப்பட வில்லை. முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா புகைப்படத்துடன் கையேடுகள் சிதறி கிடப்பதை கண்டதும் அப்பகுதிக்கு வயல் வேலைக்கு செல்வோர் எடுத்து பார்த்த போது தான் விவசாயிகளின் ஒருங்கிணைந்த கையேடு என்பது தெரியவந்தது.

இந்த கையேடுகளை பராமரிப்பதில் குளறுபடி ஏதும் ஏற்பட்டதால் தூக்கி வீசப்பட்டதா? அல்லது காலாவதி யானதால் அந்த கையேடுகள் வீசப்பட்டதா? அதனை வீசி சென்றது யார்? என்பது குறித்து உடனடியாக தெரிய வில்லை. எனவே சம்பந்தப் பட்ட வேளாண்துறை அதி காரிகள் அந்த கையேடுகளை கைப்பற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இது மாதிரியான ஆவணங்கள் குப்பைக்கு வருவதற்கு அதி காரிகளின் மெத்தனபோக்கே காரணம் எனவும் சிலர் குற்றம் சாட்டினர். எனினும் தூக்கி வீசப்பட்ட கையேடுகளின் நிலை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னரே தெரிய வரும்.

Next Story