இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் கடனுதவி
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் கடனுதவி வழங்கப்படும் என சிறப்பு முகாமில் கலெக்டர் கணேஷ் கூறினார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் தேசிய தொழில் முனைவோர் நாளையொட்டி தொழில் முனைவோருக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமை கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட தொழில் மையத்தை, தொழில் முனைவோர் அணுகி தங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும். வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தில் உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரையிலும், சேவை நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் வரையிலும், வியாபார நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் வரையிலும் கடன் வழங்கப்படும்.
வங்கியில் கடன் வழங்க ஒப்பளிப்பு கொடுக்கும் நபர்களுக்கு மாவட்ட தொழில் மையம் மூலமாக 7 நாட்களுக்கு மேலாண்மை பயிற்சி அளிக்கப்படும்.மேலும் தொழில் முனைவோர்களுக்கு தேவையான பயிற்சிகளை கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் மூலமாகவும் பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.
முகாமில் மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் இளங்கோவன், சிறு தொழில் அதிபர்கள் சங்கத்தின் தலைவர் ராஜ்குமார், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக கிளை மேலாளர் சுப்பிரமணியன்், மாவட்ட தொழில் மைய திட்ட மேலாளர் திரிபுரசுந்தரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story