வீடு புகுந்து பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு 2 பேர் கைது
தூத்துக்குடியில் வீடு புகுந்து பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்து சென்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி குரூஸ்புரம் பட்டம்கட்டியார் காம்பவுண்டை சேர்ந்தவர் கோவிந்தன். இவருடைய மனைவி பேச்சியம்மாள் (வயது 45) பூ வியாபாரி. கோவிந்தன் இறந்து விட்டார். இவர்களின் மகன் மற்றும் மகளுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனால் பேச்சியம்மாள் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
தூத்துக்குடி அரிராம் நகரை சேர்ந்த திருசெல்வம் (45) என்பவர் குரூஸ்புரம் பகுதியில் தள்ளுவண்டியில் சர்பத் வியாபாரம் செய்து வருகிறார். அவ்வப்போது திருசெல்வம், பேச்சியம்மாளுக்கு சிறு, சிறு உதவிகள் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் திருசெல்வம், பேச்சியம்மாளின் வீட்டுக்கு சென்று அவரிடம் பூக்களை கொடுத்து கட்டி தர கேட்டுள்ளார். சிறிது நேரத்தில் பூக்களை பேச்சியம்மாள் கட்டி கொடுத்தார். அப்போது அவரை கீழே தள்ளிய திருசெல்வம், பேச்சியம்மாள் கழுத்தில் கிடந்த 4½ பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டார்.
2 பேர் கைது
இதனால் அதிர்ச்சி அடைந்த பேச்சியம்மாள் தூத்துக்குடி வடபாகம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி அதே பகுதியில் பதுங்கி இருந்த திருசெல்வத்தை பிடித்தனர். மேலும் அவர் பறித்து சென்ற நகையை அவரது உறவினரான சோட்டையன்தோப்பை சேர்ந்த ஜெயந்தி (31) என்பவரிடம் கொடுத்து வைத்தது தெரியவந்தது.
இதனையடுத்து வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருசெல்வம், ஜெயந்தி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தங்க சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது.

Related Tags :
Next Story