பட்டுக்கோட்டை அருகே ஆற்றில் அழுகிய நிலையில் இளம் பெண் பிணம் யார் அவர்? போலீசார் விசாரணை


பட்டுக்கோட்டை அருகே ஆற்றில் அழுகிய நிலையில் இளம் பெண் பிணம் யார் அவர்? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 12 Nov 2017 3:45 AM IST (Updated: 12 Nov 2017 1:22 AM IST)
t-max-icont-min-icon

பட்டுக்கோட்டை அருகே ஆற்றில் அழுகிய நிலையில் இளம் பெண் பிணம் கிடந்தது. அவர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டுக்கோட்டை,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த மகிழங்கோட்டை கிராமம் அருகே அக்கினி ஆற்றில் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணின் பிணம் ஒன்று அழுகிய நிலையில் கரை ஒதுங்கி கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த அதிராம்பட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பெண்ணின் உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை டாக்டர்கள் அங்கு வரவழைக்கப்பட்டு அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து ராஜாமடம் கிராம நிர்வாக அலுவலர் மணி கொடுத்த புகாரின் பேரில் அதிராம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணமாக கிடந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்?, யாராவது இந்த பெண்ணை கொலை செய்து உடலை ஆற்றில் வீசி சென்றனரா? அல்லது ஆற்றில் அடித்து வரப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story