ஆத்தூரில் அடிப்படை வசதி கோரி சேலம் கலெக்டரை பொதுமக்கள் முற்றுகை
ஆத்தூரில் டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு பணியை பார்வையிட வந்த சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணியை பொதுமக்கள் அடிப்படை வசதி கோரி முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆத்தூர்,
சேலம் மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை பார்வையிட ஆத்தூருக்கு நேற்று காலையில் மாவட்ட கலெக்டர் ரோகிணி வந்தார். ஆத்தூர் முல்லைவாடி 4, 5, 6 ஆகிய வார்டுகளில் உள்ள கலைஞர் காலனி, கல்லாநத்தம் ரோடு ஆகிய பகுதிகளில் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு ஒழிப்பு பணிகளை பார்வையிட்டு அவர் ஆய்வு செய்தார்.
அப்போது அந்த பகுதி மக்கள் தங்களுக்கு குடிநீர், உப்பு தண்ணீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கேட்டு கலெக்டர் ரோகிணியுடன் வாக்குவாதம் செய்தனர். அதே நேரத்தில் கலைஞர் காலனியில் உள்ள ஒரு பாழுங்கிணற்றில் குப்பைகள் கொட்டப்பட்டு இருந்தன. அப்பகுதி மக்கள் அந்த கிணற்றை தூர்வாரி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கூறினர். பொதுமக்கள் மிகுந்த ஆவேசமாக தங்கள் கோரிக்கையை வலியுறுத்தியதால் அங்கு கூச்சல்-குழப்பம் நிலவியது போன்ற சூழல் காணப்பட்டது.
இதனிடையே அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் சென்ற கலெக்டர் ரோகிணி, அங்கு தண்ணீரில் கொசுப் புழுக்கள் உள்ளதா? என்று ஆய்வு செய்தார். தங்களின் கோரிக்கை குறித்து பதில் அளிக்காத நிலையில், ஆய்வு பணியை கலெக்டர் தொடர்ந்ததால், ஒரு கட்டத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, கலெக்டரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
அவரை காரில் ஏற விடாமல் தடுத்து நிறுத்திய பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தருவது குறித்து பதில் தெரிவித்து விட்டு செல்லும்படி கூறி முற்றுகையிட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து ஆத்தூர் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் இருந்து கலெக்டரை மீட்டு காரில் ஏற்றினர். அதன்பின்னர் அங்கிருந்த சிலர் கலெக்டர் காரை செல்ல விடாமல் வழிமறித்தனர். உடனே அங்கிருந்த போலீசார் பொதுமக்களை விலக்கிவிட்டு காரை வேகமாக செல்லுமாறு கூறி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
கலெக்டர் ரோகிணியை பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கலெக்டரின் இந்த ஆய்வின் போது, ஆத்தூர் உதவி கலெக்டர் செல்வன், தாசில்தார் முத்துராஜா, நகரசபை ஆணையாளர்கள் க.கண்ணன்(ஆத்தூர்), சென்னு கிருஷ்ணன் (நரசிங்கபுரம்) மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story