ஏரியூர் அருகே வைரஸ் காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலி


ஏரியூர் அருகே வைரஸ் காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலி
x
தினத்தந்தி 12 Nov 2017 4:15 AM IST (Updated: 12 Nov 2017 1:33 AM IST)
t-max-icont-min-icon

ஏரியூர் அருகே வைரஸ் காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலியானான்.

ஏரியூர்,

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள ஆயாமரத்துப்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ், கூலித்தொழிலாளி. இவருடைய மகன் விஷ்ணு(வயது 8). சிறுவன் அங்குள்ள அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். மாணவனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் பெற்றோர் மாணவனை மேச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு விஷ்ணுவுக்கு காய்ச்சல் குறையாததால் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். இருப்பினும் அவனுக்கு காய்ச்சல் குறையவில்லை. இதையடுத்து மாணவன் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அங்கு மாணவனை பரிசோதனை செய்த போது அவனுக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்தநிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாணவன் விஷ்ணு பரிதாபமாக உயிரிழந்தான். வைரஸ் காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் இறந்ததால் அந்த கிராமம் சோகத்தில் மூழ்கியது. ஏரியூர் பகுதியில் இதுவரை டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்கு 20-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இதனால் ஏரியூர் பகுதியில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Tags :
Next Story