பஸ் நிலையத்தில் மேற்கூரை அமைக்கும் பணி முடக்கம் போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கி தவிப்பு
கலவை பஸ் நிலையத்தில் மேற்கூரை அமைக்கும் பணி முடங்கி உள்ளதால் பஸ்கள் வெளியிலேயே போக்குவரத்து நெரிசலில் பயணிகளை இறக்கிவிட்டு செல்கின்றன. இதனால் பொது மக்களும் வாகன ஓட்டி களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை,
வேலூர் மாவட்டத்தில் ஆன்மிக முக்கியத்துவம் உள்ள ஊர்களில் கலவை ஒன்று. இதனை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ள பொது மக்கள், மாணவ, மாணவிகள் கோவில்கள் மற்றும் மடத்திற்கு வரும் பக்தர்கள் என ஏராளமானோர் நாள்தோறும் கலவைக்கு வந்து செல்கின்ற னர்.
வேலூர், திருவண்ணாமலை ஆகிய இரு மாவட்டங்கள் இணையும் பகுதியில் இருக்கும் முக்கியமான ஊர் என்பதால் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் வந்து செல் கின்றன.
மேலும் காஞ்சீபுரம், செய் யாறு ஆகியவற்றை சுற்றியுள்ள இடங்களில் உள்ள தொழிற் சாலைகளில் வேலைக்கு பணியாளர்களை ஏற்றி செல் வதற்காகவும் நாள்தோறும் ஏராளமான பஸ்கள் கல வைக்கு வந்து செல்கின்றன.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கலவையில் பஸ் நிலையம் போதுமான இடவசதி கொண்டதாக இல்லை.
குறிப்பாக ஒரே நேரத்தில் கலவை பஸ் நிலையத்தில் 4 அல்லது 5 பஸ்கள் மட்டுமே நிற்க முடியும். பஸ்கள் நின்றுவிட்டால் பயணிகள் ஒதுங்குவதற்கு கூட இடம் இருக்காது அவ்வளவு நெரிசலாக இருக்கும்.
இவற்றிற்கும் மேலாக பஸ் நிலையம் மேற்கூரை இல் லாமல் திறந்தவெளியாக இருப்பதால் மழை, வெயில் நேரங்களில் பொதுமக்கள், பயணிகள் பெரிதும் அவதிப் பட்டு வந்தனர்.
இதைத்தொடர்ந்து கலவை பஸ் நிலையத்திற்கு மேற்கூரை அமைக்க முடிவு செய்யப் பட்டது. மேற்கூரை அமைக்க முடிவு செய்யப்பட்டதே தவிர அதற்கான பணிகள் தொடங் கப்படாமல் பல மாதங்களாக அப்படியே உள்ளது.
இதுகுறித்து ஏற்கனவே ‘தினத்தந்தி’ நகர்வலம் பகுதி யில் கலவை பஸ் நிலையத்தில் மேற்கூரை இல்லாமல் மழை, வெயிலில் பயணிகள் அவதிப் படுவது குறித்து படம் வெளியிடப்பட்டது.
அதன்பின்னர் சில நாட் களில் மேற்கூரை அமைப்பதற் கான பணிகள் தொடங்கப் பட்டு அதற்காக பஸ் நிலைய பகுதியில் பள்ளம் தோண்டப் பட்டது. பள்ளம் தோண்டப் பட்டு தூண்கள் அமைக்க கான்கிரீட் போடப்பட்ட தோடு அப்படியே பணிகள் முடங்கி கிடக்கிறது.
பஸ் நிலைய பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டு விட்டதால் பஸ் நிலையத்திற் குள் பஸ்கள் வந்து நிற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பஸ் நிலையத்திற்கு முன் ஆற்காடு - மாம்பாக்கம் சாலையிலேயே பஸ்கள் நிற்க வேண்டிய நிலை உள்ளது.
ஏற்கனவே ஆற்காடு - மாம்பாக்கம் சாலை, குறுகிய சாலை என்பதால் பஸ் நிலையம் முன்பு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக பஸ் நிலையம் முன்பாக எதிர் எதிர்திசையில் இரு பஸ்கள் நிற்பது சிரமமானதாக உள்ளது. அவ்வாறு பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி இறக்கினால் இரு திசையிலும் எந்த வாகனங்களும் செல்ல முடியாமலும், பயணிகள் பஸ்களில் ஏறி, இறங்குவதற்கும் முடியாமல் அவதிப்படுகின் றனர்.
இதற்கும் மேலாக கலவைக்கு வந்து அங்கிருந்து திரும்பி செல்லும் பஸ்கள் முன்பு பஸ்நிலையத்திற்குள் சென்று பயணிகளை ஏற்றி, இறக்கி திரும்பி செல்லும். தற்போது பஸ் நிலையத்திற் குள்ளும் செல்ல முடியாமல், குறுகலான சாலையில் பஸ்களை திரும்பி செல்லவும் முடியாமல் சில பஸ்கள் பஸ் நிலைய பகுதியை தாண்டி சென்று பஸ்களை திரும்பி வருகின்றன.
இதனால் பயணிகள், பஸ் கள் இங்கு நிற்குமா அல்லது அங்கு செல்ல வேண்டுமா? என அங்கும், இங்கும் அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள் ளது.
நாள்தோறும் நூற்றுக்கணக் கான மாணவ, மாணவிகளும் இந்த பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். பஸ்களும் பஸ் நிலையத்தில் தூண்கள் அமைக்க பள்ளம் தோண்டப் பட்டு மணல் கொட்டப்பட்ட பகுதிக்கு அருகிலேயே நின்று செல்வதால், பஸ்சில் செல்ல வேண்டிய மாணவ, மாணவி கள் கீழே விழுந்து எழுந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
எனவே பொதுமக்கள், பய ணிகள், மாணவ, மாணவிகள் நலனை கருத்தில் கொண்டு முடங்கிக்கிடக்கும் பஸ் நிலைய மேற்கூரை அமைக்கும் பணியை முடுக்கி விட்டு விரைந்து மேற்கூரை அமைத்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Tags :
Next Story