வீணாக தண்ணீர் கடலுக்கு செல்வதை தவிர்க்க தடுப்பணையின் உயரத்தை அதிகரிக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
வீணாக தண்ணீர் கடலுக்கு செல்வதை தவிர்க்க தடுப்பணையின் உயரத்தை அதிகரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீஞ்சூர்,
ஆந்திராவில் உற்பத்தியாகும் ஆரணி ஆறு பிச்சாட்டூர் நீர்தேக்கத்தின் வழியாக சுருட்டப்பள்ளி அணைக்கட்டை அடைகிறது. அங்கிருந்து பணப்பாக்கம், கல்பட்டு, செங்கதகுளம், பாலிஸ்வரம், அனுப்பநாயக்கன்குப்பம், லட்சுமிபுரம், அத்தமணஞ்சேரி, ரெட்டிபாளையம் போன்ற அணைக்கட்டுகளை கடந்து பழவேற்காடு ஏரியை அடைகிறது. வடகிழக்கு பருவ மழை காரணமாக ஆரணிஆற்றில் இருந்து கடந்த 10 நாட்களாக பொன்னேரியை அடுத்த லட்சுமிபுரம் கிராமத்தில் உள்ள அணைக்கட்டு நிரம்பி வழிய தொடங்கி உள்ளது.
திருவள்ஷி{ர் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் அணைக்கட்டின் இரு புறங்களிலும் உள்ள மதகுகள் திறந்து விடப்பட்டுள்ளது. இவ்வாறு வெளிறும் மழைநீர் வீணாக கடலில் கலக்கிறது.
ஆரணிஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைக்கட்டுகளின் அளவை சற்று அதிகரித்து மழைநீரை சேமித்தால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். ஆரணிஆற்றின் இருபுறங்களிலும் உள்ள பொதுப்பணித்துறை, ஊராகவளர்ச்சிதுறை, வருவாய்த்துறை, வனத்துறை உட்பட பல்வேறு அரசு துறைகளின் பராமரிப்பில் உள்ள ஓடைகள், ஏரிகள், குளம், குட்டைகள் உள்பட பல்வேறு நீர்நிலைகள் நிரம்பும் சூழ்நிலை உருவாகும்.
கடலில் தற்போது 2 டி.எம்.சி. மழைநீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க மாவட்ட நிர்வாகமும் பொதுப்பணிதுறை நிர்வள ஆதார அமைப்பினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.