மோனோ ரெயில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் 7 நாளில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவு


மோனோ ரெயில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் 7 நாளில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவு
x
தினத்தந்தி 12 Nov 2017 4:00 AM IST (Updated: 12 Nov 2017 2:55 AM IST)
t-max-icont-min-icon

மோனோ ரெயில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி 7 நாளில் அறிக்கை சமர்ப்பிக்க மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.

மும்பை,

மோனோ ரெயில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி 7 நாளில் அறிக்கை சமர்ப்பிக்க மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.

தீப்பிடித்த மோனோ ரெயில்

மும்பையில் செம்பூர் – வடலா இடையே 9 கி.மீ. தூரத்திற்கு மோனோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 16–ந் தேதி அதிகாலை மைசூர்காலனி மோனோ ரெயில் நிலையத்தில் வந்து கொண்டிருந்த ஒரு மோனோ ரெயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

இதில் அந்த மோனோ ரெயிலின் 2 பெட்டிகள் முற்றிலுமாக எரிந்து உருக்குலைந்தன. தீப்பிடித்து எரிந்த மோனோ ரெயில் காலியாக சென்றதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

7 நாளில் விசாரணை அறிக்கை

மோனோ ரெயில் தீப்பிடித்த இந்த சம்பவம் பயணிகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. தீ விபத்தின் காரணமாக மோனோ ரெயில் சேவையும் கடந்த மூன்று நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே மோனோ ரெயில் தீ விபத்து தொடர்பாக மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டது. நகர்ப்புற மேம்பாட்டு துறை முதன்மை செயலாளர் நிதின் கேரீர் விசாரணை நடத்தி 7 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளார்.

இதுகுறித்து மாநில உள்துறை இணை மந்திரி ரஞ்சித் பாட்டீல் கூறுகையில், அனைத்து வகை போக்குவரத்திலும் பயணிகளின் பாதுகாப்புக்கு தான் அரசு முன்னுரிமை கொடுக்கும். இதில் சமாதானம் செய்து கொள்ள முடியாது.

மோனோ ரெயில் தீப்பிடித்து எரிந்ததற்கான காரணம் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டு விடும் என்றார்.


Next Story