பெண் டிரைவர்கள்


பெண் டிரைவர்கள்
x
தினத்தந்தி 12 Nov 2017 1:06 PM IST (Updated: 12 Nov 2017 1:06 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடக மாநில அரசு போக்குவரத்து துறையில் 50 சதவீத இடஒதுக்கீட்டில் பெண் டிரைவர் களை நியமிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

ர்நாடக மாநில அரசு போக்குவரத்து துறையில் 50 சதவீத இடஒதுக்கீட்டில் பெண் டிரைவர் களை நியமிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதற்கேற்ப பெண்களுக்கு ஓட்டுநர் பயிற்சியும், ஓட்டுநர் உரிமமும் வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சிகள் அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது.

பெண்களின் ஆளுமைத்திறனை அதிகப்படுத்தும் நோக்கத்திலும், சுமுகமான சாலை போக்குவரத்தை மேம்படுத்தும் வகையிலும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது. முறையான ஓட்டுநர் பயிற்சி பெற்று உரிமம் பெறும் பெண்கள் கர்நாடக மாநில அரசு போக்குவரத்து கழகம், மாநகர போக்குவரத்து கழக பஸ்களில் டிரைவர் களாக பணியமர்த்தப்பட உள்ளனர். தற்போது மாநில போக்குவரத்து கழகம் மற்றும் மாநகர போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் பெண் டிரைவர்களின் எண்ணிக்கை ஐந்துக்கும் குறைவாகவே இருக்கிறது.

“அரசு போக்குவரத்து கழக பஸ்களில் பெண் டிரைவர்கள் நியமிக்கப்படுவது வரவேற்கத்தக்கது. இது பெண்களை ஊக்கப்படுத்துவதாக அமையும்” என்கிறார், அமீனம்மா. இவர் மாநில போக்குவரத்து கழக பஸ்சில் டிரைவராக பணிபுரியும் பெண். ஏற்கனவே கர்நாடகாவில் பெண் கண்டக்டர்கள், பெண் டிக்கெட் பரிசோதகர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story