மக்களை கவரும் ‘இரு சக்கரம்’
மிக உயரமுள்ள வித்தியாசமான சைக்கிளை வடிவமைத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார், ராஜீவ்குமார் என்ற வடிவமைப்பாளர். இவர் உருவாக்கியுள்ள சைக்கிள் எட்டரை அடி உயரம் கொண்டது.
மிக உயரமுள்ள வித்தியாசமான சைக்கிளை வடிவமைத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார், ராஜீவ்குமார் என்ற வடிவமைப்பாளர். இவர் உருவாக்கியுள்ள சைக்கிள் எட்டரை அடி உயரம் கொண்டது. அதில் அவர் சவாரி செய்யும் விதம் மற்றவர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. அந்த பிரமாண்ட சைக்கிள், சாதனைகளை அங்கீகரிக்கும் லிம்கா புத்தகம் மற்றும் ‘இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ ஆகியவற்றில் இடம் பிடித்துள்ளது.
ராஜீவ் குமார், 1991-ம் ஆண்டு தன்னுடைய தந்தையின் ‘வெல்டிங்’ பட்டறையில் முதல் சைக்கிளை உருவாக்கினார். 1999-ம் ஆண்டு 13 அடி உயரத்தில் மற்றொரு சைக்கிளை வடிவமைத்தார். ஆனால் அந்த சைக்கிளை ஓட்டுவதற்கு அப்போது போலீசார் தடை விதித்து இருக்கிறார்கள். 2001-ம் ஆண்டு 7 அடி 6 அகலத்தில் சைக்கிளை உருவாக்கி, சண்டிகாரில் இருந்து புதுடெல்லி வரையேயான தொலைவை 16 மணி நேரத்தில் கடந்திருக் கிறார்.
சண்டிகாரில் இருந்து மும்பை இடையிலான 1650 கிலோ மீட்டர் தூரத்தை தன்னுடைய பிரமாண்ட சைக்கிளில் கடந்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடிக்க வேண்டும் என்பது ராஜீவ் குமாரின் லட்சியமாக இருக்கிறது. இவருடைய முயற்சிக்கு மனைவி மன்பீரீத் மற்றும் குடும்பத்தினர் உறுதுணையாக இருக் கிறார்கள்.
“எட்டரை அடி உயர சைக்கிளை வடிவமைப்பதற்கு ஒன்றரை ஆண்டுகள் ஆனது. 80 ஆயிரம் ரூபாய் செலவானது. சைக்கிள் ஓட்டுவது எனது விருப்பமான பொழுதுபோக்காக இருந்ததால் மாறுபட்ட கோணத்தில் சைக்கிளை வடிவமைப்பது சாத்தியமானது. சாதாரண சைக்கிளுக்கும், இந்த சைக்கிளுக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. உயரம் மட்டுமல்ல அதனை ஓட்டுவதும் சிரமமானது” என்கிறார்.
அனைவரும் சைக்கிள் ஓட்ட வேண்டும் என்பதே ராஜீவ் குமாரின் விருப்பமாக இருக்கிறது. அதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுவையும், போக்குவரத்து நெருக்கடியையும் கட்டுப்படுத்தலாம் என்கிறார். அதிலும் குறைந்த தூரமுடைய இடங்களுக்கு கார்களில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்.
ராஜீவ் குமார் சாலையில் சைக் கிளில் பயணிக்கும்போது நடந்து செல்பவர்களும், வாகனங்களில் செல்பவர்களும் அவரை ஆச்சரியமாக பார்க்கிறார்கள். அவர்களிடம் சைக்கிள் ஓட்டுவதன் அவசியத்தை வலியுறுத்தி வருகிறார். நண்பர்களுடன் ஒன்றிணைந்து சைக்கிள் பந்தயங்களை நடத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

Related Tags :
Next Story