மதுரை மாவட்டத்தில் 12 போலி டாக்டர்கள் கைது
தமிழக சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி நேற்று மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆய்வு செய்ய வந்தார்.
மதுரை,
தமிழக சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி நேற்று மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆய்வு செய்ய வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது, டெங்கு காய்ச்சல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. தமிழகம் முழுவதும் போலி டாக்டர்களை கண்டறிய தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரையில் 200–க்கும் மேற்பட்ட போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் மதுரை மாவட்டத்தில் மட்டும் 12 பேரை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போலி டாக்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். காய்ச்சல் உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் அரசு ஆஸ்பத்திரிகளில் 6 மாத காலத்திற்கு மருந்து, மாத்திரைகள் உள்ளன என்றார்.
Related Tags :
Next Story