குடிமராமத்து பணிக்காக அடுத்த கட்டமாக ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் முதல்-அமைச்சர் அறிவிப்பு
குடிமராமத்து பணிக்காக அடுத்த கட்டமாக ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
நெல்லை,
நெல்லை பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் நேற்று நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி முன்னிலை வகித்தார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் வெங்கடேசன் வரவேற்று பேசினார். பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-
‘தென்பாண்டி நகர்’ என்ற திருப்பெயரைப் பெற்று பாண்டிய நாட்டின் பழம்பெருமை மிக்க பகுதியாக விளங்கும் இந்த திருநெல்வேலி சீமை தமிழும், தெய்வீகமும் மணக்கும், இயற்கை எழில் கொஞ்சும் அறிவு மாவட்டமாகும். தனது பக்தன் காயப்போட்டிருந்த நெல்மணிகள் மழையில் நனைந்து போகாதபடி சிவபெருமான் வேலி அமைத்து பாதுகாத்தார் என்பதால் இவ்வூருக்கு திருநெல்வேலி என்ற பெயர் வந்ததாகக் கூறுகிறார்கள்.
சுதந்திரப் போராட்ட வீரர்கள் பூலித்தேவன், ஒண்டி வீரன், வாஞ்சிநாதன் ஆகியோர் பிறந்த வீரமண் இது. சங்கப் புலவர்கள் வகுத்த, ஐவகை நிலங்களையும் ஒருங்கே பெற்ற மாவட்டம் திருநெல்வேலி மாவட்டமாகும்.
நூற்றாண்டு விழா நாயகர் எம்.ஜி.ஆருக்கும், தமிழ்நாட்டின் ஒளிவிளக்காகத் தோன்றிய ஜெயலலிதாவுக்கும் மிகவும் பிடித்த மாவட்டம் இந்த மாவட்டமாகும். அனைத்திந்திய அண்ணா தி.மு.க.வின் இருபெரும் தலைவர்களின் கலைவாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும் தொடர்புடையது இந்த நெல்லை மாவட்டம். அதற்கு எத்தனையோ உதாரணங்களைச் சொல்லலாம். எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கியதிலிருந்து இந்த நெல்லை மாவட்ட மக்கள் எம்.ஜி.ஆருக்கு பேராதரவு தந்து உள்ளனர்.
அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். இங்கே யாரை சட்டமன்ற வேட்பாளராக நிறுத்தினாலும் வெற்றி பெறுவார்கள் என்பதை அ.தி.மு.க. எதிர்கொண்ட பல சட்டசபை தேர்தல்களில் நிரூபித்து காட்டியவர்கள் இந்த மாவட்ட மக்கள். சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து, எம்.ஜி.ஆர். மீது மக்கள் கொண்ட அபிமானத்தை தங்கள் வாக்குகள் மூலமாக நிரூபித்துக் காட்டியவர்கள் இந்த நெல்லை மாவட்ட மக்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது. நல்லவர்களுக்கு ஆதரவு அளிக்கும், வல்லமை வாய்ந்தவர்கள் நீங்கள் என்பதால் தான், ஜெயலலிதா அரசியல் வாழ்க்கை உதயமாவதற்கு இந்த திருநெல்வேலி மாவட்டம் கீழ் திசையாக அமைந்திருந்தது.
எம்.ஜி.ஆர். ஒருமுறை ‘நான் நினைத்திருந்தால் கோடிக் கணக்கில் பணம் சேர்த்திருக்கலாம், பணத்தை சேர்க்கவில்லை. ஆனால், கோடிக்கணக்கான இதயங்களை சேர்த்துக் கொண்டிருக்கிறேன்’ என்று பேசினார்கள். இன்றைக்கும் கோடிக்கணக்கான இதயங்கள் எம்.ஜி.ஆரை வாழ்த்திக் கொண்டிருப்பதை உலகம் முழுவதும் பார்க்க முடிகிறது.
காலத்தால் எத்தனையோ நடிகர்களும், தலைவர்களும் மக்களால் மறக்கப்பட்டும், மறுக்கப்பட்டும் இருக்கும்போது எம்.ஜி.ஆர். மறைந்து 30 ஆண்டு காலம் ஆகியும் மக்களோடு மக்களாக மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும், மக்கள் உதடுகள் உச்சரித்துக் கொண்டிருக்கும் ஒரே தலைவர் எம்.ஜி.ஆர். தான். அதனால்தான் அவரை ‘மக்கள் திலகம்’ என்று நாம் போற்றுகின்றோம்.
எம்.ஜி.ஆருக்கு எத்தனையோ பட்டங்களும், விருதுகளும் கிடைத்திருக்கலாம். அத்தனையிலும் சிறந்ததாக, வெகுஜன மக்களின் இதயங்களில் ஒட்டிக் கொண்டதுமான ஒரு பட்டம்தான். ‘வாத்தியார்’ பட்டம். அடித்தட்டு மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள், மகளிர் என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டதும், அறியப்பட்டதுமான இந்த ‘வாத்தியார்’ பட்டத்தை எம்.ஜி.ஆருக்கு 1960-ம் ஆண்டு வழங்கியது இதே திருநெல்வேலி மாவட்ட நகராட்சி மன்றம்தான் என்பதை பெருமையோடு சொல்லிக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
‘வாத்தியார்’ என்று நீங்கள் வைத்த பட்டத்தைக் கொண்டே எம்.ஜி.ஆர். வரவேற்றதால் அந்தப் பெருமையும் உங்கள் மாவட்டத்திற்கு தான் சாரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஏற்படுத்தியிருக்கிற பாதையில்தான் இப்போதும் அ.தி.மு.க. பயணித்துக் கொண்டிருக்கிறது. அவர்களுடைய கொள்கைகளில் இருந்து சிறிதும் பிறழாமல்.. அவர்கள் விருப்பத்தையே வாக்குறுதியாக ஏற்று நாங்கள் பல்வேறு கடமைகளை ஆற்றி வருகின்றோம். எங்களை, நாங்கள் தலைவர்களாக ஒரு காலமும் நினைத்துக் கொண்டதில்லை. தொண்டர்களாகவே நினைத்துத்தான் அல்லும், பகலும் மக்கள் பணியாற்றி வருகிறோம்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மக்களுக்கு வழங்கிய திட்டங்களால் ஏற்பட்ட பயன்களைப் பற்றி விளக்கமாக மக்களிடம் எடுத்துக் கூறுவோம். ஜெயலலிதா வழியில் நடக்கும் இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்து இன்று வரை தொடங்கிய திட்டங்களை மக்களுக்குக் கொண்டு செல்வதில் அரசு அலுவலர்களுக்கு உற்ற தோழர்களாக இருந்து உதவி செய்யும்.
இப்போது நடந்து கொண்டிருக்கின்ற ஜெயலலிதா அரசு. பொது சுகாதாரத்திற்கும், கல்வி மேம்பாட்டிற்கும், மகளிருக்கும், விவசாயத்திற்கும், இளைஞர்களுக்கும், தொழில் வளர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இயற்கை இடர்பாடுகளிலிருந்து மக்களைக் காக்க போர்க்கால அடிப்படையில் விரைந்து செயல்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையெல்லாம் எடுத்த காரணத்தால்தான் வரலாறு காணாத வறட்சியின்போது தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்படாமல் காத்தும், தற்போது தமிழ்நாட்டில் தொடர்ந்து பெய்யும் வடகிழக்குப் பருவ மழையிலிருந்து மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்காமல் உடனடி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டும் மக்களை பாதுகாக்க முடிகிறது.
அனைத்துத் துறைகளும் முடுக்கி விடப்பட்டு, அமைச்சர்களின் தலைமையில் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு குழுவாக சென்று நிவாரணப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதை மக்கள் அறிவார்கள். குறை கூறுபவர்கள், குறை கூறிக் கொண்டுதான் இருப்பார்கள். நல்லது எது செய்தாலும் அதிலும் ஒரு குற்றம் கண்டுபிடித்து குறை சொல்வதை தி.மு.க. அதிகமாகவே செய்து வருகிறது. பாவம், இதன் மூலமாகத்தான் தங்கள் இருப்பை அவர்கள் காட்டிக் கொள்கிறார்கள்.
எதிர்கட்சிகளால் ஏற்படும் தடைகளையெல்லாம் தகர்த்து எறிந்து விட்டு, எப்போதும் நாட்டுக்கு நலம் பயக்கும் திட்டங்கள் போடுவதிலும், அதனை விரைந்து செயல்படுத்துவதிலும்தான் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின் மூலம் எத்தனை மகத்தான திட்டங்கள் மக்களுக்காக துவக்கப்பட்டுள்ளன, எத்தனை புதிய திட்டங்களுக்கு அறிவிப்புகள் வெளிவந்திருக்கின்றன என்பதைப் பற்றியெல்லாம் மக்கள் அறிவார்கள்.
அதுதான் நமக்கு பலம். பொதுமக்கள் பலம் இருக்கும் வரை. எந்த சக்தியாலும் நம்மை வீழ்த்திவிட முடியாது என்ற உறுதிப்பாட்டோடு, திருநெல்வேலி சீமைக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதிலும், அடிக்கல் நாட்டுவதிலும், புதிய திட்டங்களை அறிவிப்பதிலும் பெருமிதம் கொள்கின்றேன்.
ரூ.68 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள 100 கிராமங்களுக்கான கூட்டு குடிநீர் திட்டம் உள்பட ரூ.118 கோடி மதிப்பீட்டிலான 192 பணிகளை தொடங்கி வைத்துள்ளேன். நெல்லை மாநகராட்சியில் அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.289 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை அமைப்பு செயல்படுத்துதல் திட்டம் உள்பட ரூ.528 கோடியே 91 லட்சம் மதிப்பீட்டிலான 142 பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன்.
பல்வேறு துறைகளின் சார்பில் 34 ஆயிரத்து 655 பயனாளிகளுக்கு 87 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. இந்த அரசு பொறுப்பேற்றது முதல் இன்று வரை 11 ஆயிரத்து 112 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பிலான 35 ஆயிரத்து 157 பணிகளை தொடங்கி வைத்தும், 4 ஆயிரத்து 84 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பிலான 6 ஆயிரத்து 852 பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் உள்ளேன். ஆக மொத்தம் 15 ஆயிரத்து 196 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 42 ஆயிரத்து 9 பணிகள் நடைபெற்று வருகின்றன.
நாங்கள் ஒவ்வொரு மாவட்டத்திற்கு செல்லும் போதும், அந்த மாவட்டத்தில் ஜெயலலிதாவின் அரசு அந்த மாவட்ட மக்களுக்கு என்ன திட்டங்களை கொடுத்தது என்ன நன்மை கொடுத்தது என்பதை பட்டியலிட்டு நாங்கள் விவரமாக சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா தேனி மாவட்டத்தில் நடைபெற்றபொழுது, நானும், துணை முதலமைச்சரும் இரட்டைக்குழல் துப்பாக்கி போல் செயல்படுவோம் என்ற ஒரு கருத்தைச் சொன்னேன். நாங்கள் இணைந்து செயல்படுவோம் என்ற கருத்தை மக்களிடையே எடுத்து வைத்தோம். இதில் ஸ்டாலின் என்ன குறைகண்டு பிடித்தார் என்று தெரியவில்லை.
உள்ளக்குமுறலோடு அவர் வெளிப்படுத்திய கருத்து என்னவென்று ஊடகங்கள், பத்திரிகை வாயிலாக நாம் பார்த்தோம், உங்களுக்கும் தெரியும். எந்தளவிற்கு அவர் விமர்சனம் செய்துள்ளால், எந்தளவிற்கு எங்கள் மீது கோபம் கொண்டுள்ளார் என்பது அவருடைய உள்ளக்குமுறலில் இருந்து நாங்கள் பார்க்க முடிகிறது.
ஆகவே, நாம் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும். ஏனென்று சொன்னால், இந்த இயக்கம் ஒன்றாக இருக்கக்கூடாது, இந்த இயக்கத்தை உடைக்க வேண்டும், இந்த ஆட்சியைக் கவிழ்க்க வேண்டுமென்று பலரின் துணையோடு அவர் கனவு கண்டு கொண்டிருக்கின்றார். அவர் கனவு கானல்நீராகத்தான் இருக்கும் என்பதை இந்த நேரத்திலே சுட்டிக்காட்டுகின்றேன். எவ்வளவு இன்னல்கள், துன்பங்கள் இருந்தாலும் நாங்கள் இணைந்து செயல்பட்டு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிலே நாம் சபதம் ஏற்போம்.
இருபெரும் தலைவர்களுடைய லட்சியத்தை நிறைவேற்றுவதே நம்முடைய லட்சியம், லட்சியம், லட்சியம் என்பதை இந்த நேரத்திலே குறிப்பிட விரும்புகின்றேன்.
ஆகவே, இந்த இயக்கம் மக்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட இயக்கம். மக்களுக்கு சேவை செய்கின்ற இயக்கம். இவர்களைப்போன்று, ஒரு குடும்பத்திற்காக ஆட்சி செய்கின்ற ஆட்சி இந்த ஆட்சி அல்ல. நாட்டு மக்களுக்கு நன்மை செய்கின்ற ஆட்சி இந்த ஆட்சி. அதற்காக எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட அ.தி.மு.க.வை கட்டிக்காக்க ஜெயலலிதா, இந்த இருபெரும் தலைவர்கள் வகுத்த பாதையில் நாங்கள் சென்று கொண்டிருக்கின்றோம் என்பதை இந்த நேரத்திலே சுட்டிக்காட்டக் கடமைப்பட்டிருக்கின்றேன்.
அதேபோல, இருபெரும் தலைவர்கள் எப்படி கடைக்கோடியில் இருக்கின்ற மக்களுக்கும் திட்டப்பணிகளை எடுத்துச் சென்றார்களோ அதேபோல இந்த அரசும், கடைக்கோடியில் இருக்கின்ற மக்களுக்கு திட்டப்பணிகளை எடுத்துச் செல்வதில் இரவு, பகல் பாராமல் உழைத்து முதன்மையாக விளங்கிக் கொண்டிருக்கின்ற அரசு என்பதை இந்த நேரத்திலே சுட்டிக்காட்டக் கடமைப்பட்டிருக்கின்றேன்.
இன்றைக்கு தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு அமைதிப் பூங்காவாக விளங்குகின்ற நாடு தமிழ்நாடு என்பதை இந்த நேரத்திலே பெருமையோடு சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன். இந்த அரசிற்கு மக்களுடைய பேராதரவு இருக்கின்றது அதன் காரணமாக, தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக விளங்கிக் கொண்டிருக்கின்றது.
விவாசாய பெருங்குடி மக்கள் பயன்பெற வேண்டுமென்பதற்காக நீண்ட நாட்களாக விவசாயிகள் அரசுக்கு விடுத்த கோரிக்கையை நிறைவேற்றும்விதமாக குடிமராமத்து என்னும் அற்புதமான திட்டத்தை இந்த அரசு தொடங்கி முதற்கட்டமாக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து, 1519 ஏரிகளில் பணிகள் தொடங்கப்பட்டு இன்றைக்கு நிறைவடைந்திருக்கின்றன. அடுத்த கட்டமாக ரூ.300 கோடி குடிமராமத்துப் பணிகளுக்காக ஒதுக்கப்படவுள்ளது. அதன்மூலம், பல்லாயிரக்கணக்கான ஏரிகள் தூர்வாரப்படும்.
விவசாயப் பெருங்குடிமக்களும், விவசாய பிரதிநிதிகளும் ஆங்காங்கே ஏரி, குளங்களில் இருக்கின்ற வண்டல் மண்ணை இலவசமாக எடுத்து, தங்கள் நிலங்களுக்கு எருவாக இட்டார்கள். ஆகவே, இந்தத் திட்டம் ஒரு மிகப்பெரிய, பிரம்மாண்டமான திட்டம். இந்த திட்டம் மூலமாக, பருவமழை பொழிகின்றபோது கிட்டத்தட்ட 30 சதவீதம் நீர் தேங்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கித்தந்தது இந்த அரசு என்பதை இந்த நேரத்தில் பெருமையோடு சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன்.
அ.தி.மு.க. ஒன்றரை கோடி தொண்டர்களால் கட்டப்பட்ட எக்கு கோட்டை, மாபெரும் இயக்கம் என்பதை கோடிட்டுக்காட்ட விரும்புகின்றேன். இதிலிருந்து ஒரு கல்லைக்கூட உங்களால் அசைக்க முடியாது என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :
Next Story