ஊத்துக்கோட்டை அருகே தொற்றுநோய் தடுப்பு பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்


ஊத்துக்கோட்டை அருகே தொற்றுநோய் தடுப்பு பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்
x
தினத்தந்தி 13 Nov 2017 3:45 AM IST (Updated: 13 Nov 2017 12:37 AM IST)
t-max-icont-min-icon

ஊத்துக்கோட்டை அருகே தொற்றுநோய் தடுப்பு பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் சுந்தரவல்லி இது குறித்து மாணவர்களிடம் கேள்வி கேட்டு திருக்குறளை பரிசாக வழங்கினார்.

ஊத்துக்கோட்டை,

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஒதப்பை, நெய்வேலி ஊராட்சிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் நடந்து வரும் தொற்றுநோய் தடுப்பு பணிகளை கலெக்டர் சுந்தரவல்லி பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஒதப்பை ஊராட்சி பகுதியில் நிலத்தடி நீர்தேக்க தொட்டியில் தேக்கி வைத்திருந்த நீரின் தன்மையை பார்வையிட்டு உடனே அந்த தொட்டியை அகற்ற அங்குள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் வீடு, வீடாக சென்ற அவர் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கினார். தேவையற்ற டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் நீர் தேங்குவதற்க்கு ஏதுவாக இருக்கும் பொருட்களை அப்புறப்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

இதையோட்டி சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொண்டால் ஏற்படும் நன்மைகளை பற்றி அங்குள்ள பள்ளி மாணவர்களுக்கு வினா எழுப்பி சரியாக பதில் சொன்னவர்களுக்கு கலெக்டர் சுந்தரவல்லி திருக்குறளை பரிசாக வழங்கி ஊக்கப்படுத்தினார். அப்போது சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரபாகரன், தாசில்தார்கள் கிருபாஉஷா, தமிழ்செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஊராட்சிக்கு உள்பட்ட அண்ணாநகர் பகுதியில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாக சுகாதாரத்துறை அதிகாரிகள் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள். இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் நேற்று வீடு, வீடாக சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அந்த பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று வீடுகளில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரின் தன்மையை பற்றியும் தேவையற்ற பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டார். பின்னர் அவர் பொதுமக்களிடம் வீடுகளையும், சுற்றுப்புறங்களையும் தூய்மையாக வைத்துக்கொண்டால் நோய், நொடியின்றி வாழலாம் என அறிவுரைகளை வழங்கினார்.


Next Story