மத்திய, மாநில அரசுகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மத்திய, மாநில அரசுகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Nov 2017 4:00 AM IST (Updated: 13 Nov 2017 1:19 AM IST)
t-max-icont-min-icon

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருமுருகன்பூண்டி பேரூராட்சி இடைக்குழு சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அனுப்பர்பாளையம்,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருமுருகன்பூண்டி பேரூராட்சி இடைக்குழு சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருமுருகன்பூண்டியை அடுத்த கோபால்டு மில் எதிரில் உள்ள கூட்டுறவு சங்கத்தின் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் ரவி தலைமை தாங்கினார். திருமுருகன்பூண்டி பேரூராட்சி முன்னாள் தலைவர் ராமசாமி, முன்னாள் கவுன்சிலர் பொன்னுசாமி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினார்கள்.

இதில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்தும், ரே‌ஷன் சர்க்கரை விலையை உயர்த்திய மாநில அரசை கண்டித்தும் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் ரே‌ஷன் பொருட்கள் மற்றும் குடிநீர் வழங்குவதை முறைப்படுத்த கோரியும், சுகாதார பணிகளை துரிதப்படுத்தி டெங்கு கொசுவை ஒழிக்க வேண்டும் என்றும், ராக்கியாபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை செயல்பட வலியுறுத்தியும், சாலை, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரியும், உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த கோரியும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதில் பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


Next Story