திருப்பூர் பகுதியில் மின்வெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்


திருப்பூர் பகுதியில் மின்வெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 13 Nov 2017 3:15 AM IST (Updated: 13 Nov 2017 1:19 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் கருவம்பாளையம் பகுதியில் மின்வெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்,

திருப்பூர் கருவம்பாளையம் பிரிவு விரிவாக்கம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றார்கள். இந்த நிலையில் நேற்று காலையில் இருந்தே அந்த பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளது. அடிக்கடி இது போன்ற மின்தடை ஏற்பட்டு வந்ததால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் நேற்று இரவு மங்கலம் ரோடு பகுதியில் கூடினார்கள். பின்னர் அங்கு சாலையில் அமர்ந்து, உடனடியாக மின்வெட்டை சரி செய்யக்கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மத்திய போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மேலும், சீரான மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story