அதிக வட்டி கேட்டு ஆசிரியருக்கு மிரட்டல் தலைமை ஆசிரியர் கைது
கோட்டூர் அருகே அதிக வட்டி கேட்டு ஆசிரியரை மிரட்டிய தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
கோட்டூர்,
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே களப்பால் கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி. இவர் பாலையூர் நத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர், மேலப்பனையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்க்கும் ஜெயபால் (வயது 45) என்பவரிடம் கடந்த 2000-ம் ஆண்டு ரூ.60 ஆயிரம் கடன் வாங்கி உள்ளார். அதற்காக தொடர்ந்து 17 ஆண்டுகளாக கருணாநிதி வட்டி கட்டி வந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக வட்டிப்பணம் கட்டவில்லை. இதையடுத்து கருணாநிதி வாங்கிய கடனுக்கு வட்டி கட்டாததால் தற்போது ரூ. 10 லட்சம் ஆகிவிட்டது. இந்த பணத்தை திருப்பி தருமாறு கருணாநிதியை, ஜெயபால் மிரட்டினார். இதுகுறித்து கருணாநிதி களப்பால் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுப்ரியா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயபாலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story