மோட்டார் சைக்கிள் பிரசார யாத்திரை கோவில்பட்டி தாலுகாவில் தொடர வலியுறுத்தி நடந்தது
இளையரசனேந்தல் வருவாய் கிராமங்கள் கோவில்பட்டி தாலுகாவிலேயே தொடர வலியுறுத்தி நேற்று பாரதிய கிசான் சங்கத்தினர் மோட்டார் சைக்கிள் பிரசார யாத்திரை நடந்தது.
கோவில்பட்டி,
இளையரசனேந்தல் வருவாய் கிராமங்கள் கோவில்பட்டி தாலுகாவில் இணைக்கப்பட்டு உள்ளது. தற்போது இதனை நெல்லை மாவட்டம் திருவேங்கடம் தாலுகாவில் இணைப்பதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இளையரசனேந்தல் வருவாய் கிராமங்கள் கோவில்பட்டி தாலுகாவிலேயே தொடர வலியுறுத்தி நேற்று, தூத்துக்குடி மாவட்ட பாரதிய கிசான் சங்கம் சார்பில் மோட்டார் சைக்கிள் பிரசார யாத்திரை நடந்தது.
கோவில்பட்டி பயணிகள் விடுதி முன்பு தொடங்கிய இந்த பிரசார யாத்திரைக்கு சங்க மாவட்ட செயலாளர் சேசுநாயக்கர் தலைமை தாங்கினார். வக்கீல் ரெங்கநாயகலு முன்னிலை வகித்தார். பிரசார யாத்திரையை கழுகுமலை வட்டார கம்மவார் சங்க தலைவர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.
இந்த பிரசார யாத்திரை இளையரசனேந்தல் வருவாய் கிராமங்களான ஜமீன் தேவர்குளம், பிள்ளையார் நத்தம், பிச்சை தலைவன்பட்டி, வடக்கு பட்டி, இளையரசனேந்தல், லட்சுமியம்மாள்புரம், அய்யனேரி, அப்பனேரி, சித்திரம் பட்டி, புளியங்குளம், நக்கலமுத்தன்பட்டி வழியாக சென்று முக்கூட்டுமலை பகுதியில் முடிவடைந்தது.
இந்த பிரசார யாத்திரையில் இளையரசனேந்தல் பிர்க்கா உரிமை மீட்புக்குழு நிறுவனர் முருகன், சங்க மாவட்ட துணை தலைவர் பரமேசுவரன், மாவட்ட இயற்கை விவசாயத்தலைவர் கருப்பசாமி, கோவில்பட்டி ஒன்றிய செயலாளர் கிருஷ்ணசாமி, கோவில்பட்டி ஒன்றிய தலைவர் ஜெயராமன், நல்லையா, கிருஷ்ணம்மாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story