சைவ உணவு விதிமுறையால் எழுந்த சர்ச்சை யோகா குரு ஷெலார் மம்மா பெயரிலான தங்கப்பதக்கம் நிறுத்திவைப்பு
சைவ உணவு விதிமுறையால் ஏழுந்த சர்ச்சையை எடுத்து யோகா குரு ஷெலார் மம்மா பெயரிலான தங்கப்பதக்கம் நிறுத்திவைக்கப்பட்டது.
புனே,
சைவ உணவு விதிமுறையால் எழுந்த சர்ச்சையை எடுத்து யோகா குரு ஷெலார் மம்மா பெயரிலான தங்கப்பதக்கம் நிறுத்திவைக்கப்பட்டது.
தங்கப்பதக்கம்புனேயில் அமைந்துள்ள சாவித்திரிபாய் புலே பல்கலைக்கழகத்தின் 2016– 17–ம் கல்வியாண்டுக்கான பட்டமளிப்பு விழாவில், யோகா குரு ஷெலார் மம்மா பெயரில் முதுகலை பிரிவுகளில் அதிக மதிபெண் பெற்று தேர்ச்சி அடைந்த மாணவர்களுக்கு தகுதி அடிப்படையில் தங்கப்பதக்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்து.
இதுகுறித்த சுற்றறிக்கையில் பதக்கம் பெறும் மாணவர்கள் சைவ உணவு உண்பவர்களாகவும், மது அருந்தாதவர்களாகவும் இருக்க வேண்டும் என்று சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. இதற்கு மாணவர்கள் கடும் அட்சேபனை தெரிவித்தனர். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது.
மாணவர்கள் மட்டும் இல்லாமல் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகளை சேர்ந்தவர்களும் விதிமுறைகளுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து தங்கப்பதக்கத்தை புலே பல்கலைக்கழகம் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.
சமத்துவித்தை வளர்க்க விரும்புகிறோம்...இதுகுறித்து அந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நிதின் கலம்கர் கூறிதாவது:–
யோகா குரு ஷெலார் மம்மா பெயரிலான பதக்கத்தை நாங்கள் நிறுத்தி வைத்துள்ளோம். நாங்கள் அந்த விதிமுறைகளை நீக்குமாறு யோகா குருவின் குடும்பத்தினரிடமும், அறக்கட்டளையிடமும் முறையிட்டோம். ஆனால் அவர்கள் அதற்கு மறுத்துவிட்டனர். எனவே நாங்கள் அந்த பதக்கத்தை நீக்கிவிட்டோம்.
எங்கள் பல்கலைக்கழகம் உணவு அடிப்படையில் எந்த மாணவர்களையும் பிரித்து பார்ப்பத்தில்லை. நாங்கள் அனைவரிடமும் சமத்துவத்தை வளர்க்கவே விரும்புகிறோம். அனைத்து மாணவர்களுக்கும் அவர்கள் விரும்பும் உணவை உண்ணும் சுதந்திரம் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.