தங்க உருளை


தங்க உருளை
x
தினத்தந்தி 13 Nov 2017 12:39 PM IST (Updated: 13 Nov 2017 12:39 PM IST)
t-max-icont-min-icon

உருளைக் கிழங்கு சிப்ஸ், பொரியல் மற்றும் பதார்த்தங்களை விரும்பாதவர்கள் வெகு குறைவுதான்.

லகம் முழுக்க அதிக அளவில் விரும்பிச் சாப்பிடும் உணவுப் பொருளில் ஒன்றாக உருளைக்கிழங்கு இருக்கிறது. இருந்தாலும் பல்வேறு நாட்டு மக்களின் உடலில் தேவைப்படும் ‘வைட்டமின்-ஏ’ பற்றாக்குறையை போக்க முடியவில்லை.

இந்த வைட்டமின் பற்றாக்குறையால் பார்வைக் குறைபாடு, நரம்பு, தசை தளர்ச்சி போன்றவை ஏற்படும். இவற்றின் பற்றாக்குறையால் கர்ப்பிணிப் பெண்கள் இறக்கும் அபாயம் ஏற்படுவது உண்டு. உலக சுகாதார நிறுவனமும் ‘வைட்டமின்-ஏ’ பற்றாக்குறையால் குழந்தைகளுக்கு பார்வைக் குறை பாடு, குருட்டுத்தன்மை ஏற்படுவதாக குறிப்பிட்டுள்ளது.

இதற்காக அமெரிக்காவின் ஓகியோ மாகாண பல்கலைக்கழக ஆய்வுக்குழு, இத்தாலியில் ஆய்வு செய்து புதிய மரபணு மாற்ற உருளையை உருவாக்கி உள்ளது. ‘கோல்டன் பொட்டட்டோ’ எனப்படும் இதை அவித்ததும் உட்பகுதி மஞ்சள் நிறமாக மாறிவிடும். இதில் ‘வைட்டமின்-ஏ’ மிகுதியாக இருக்கும். அத்துடன் ‘வைட்டமின்-இ’ சத்தும் போதிய அளவில் கிடைக்கும்.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட இந்த தங்க உருளைக்கிழக்கு வைட்டமின் பற்றாக்குறையை ஈடுகட்டுவதால் பல்லாயிரக் கணக்கானவர்களின் ஆரோக்கியம் மேம்படும். 150 கிராம் உருளை சாப்பிடுவதால் மனிதனுக்கு தினசரி தேவைப்படும், 42 சதவீத ‘வைட்டமின்-ஏ’, 34 சதவீத ‘வைட்டமின்-இ’ சத்து கிடைக்கப் பெறும்.

ஆய்வு நிலையில் உள்ள இந்த மரபணு உருளை, சில பரிசோதனைகளைக் கடந்து பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம், ‘வைட்டமின்-ஏ’ தேவையை ஈடுகட்டும் புதிய வாழைப் பழத்தை உகாண்டாவில் பரிசோதனை செய்து பார்த்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story